மேலும் அறிய

Actor Srikanth about Vijay: கமல் கொடுத்த அட்வைஸ்.. விஜய் கூட பேசறதில்ல.. நேர்காணலில் ஓப்பனாக பேசிய ஸ்ரீகாந்த்!

Actor Srikanth about Vijay: தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த், விஜய், கமல் மற்றும் தன்னை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை கூறியிருக்கிறார்.

தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த், விஜய், கமல் மற்றும் தன்னை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை கூறியிருக்கிறார்.

காஃபி வித் காதலில் நடிகர் ஸ்ரீகாந்த்:

காதல், ட்ராமா, சென்டிமன்ட் கலந்து, கம்ப்ளீட் பேக்கேஜாக சுந்தர் சி உருவாக்கிய படம் காஃபி வித் காதல். இப்படத்தில், நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அது மட்டுமன்றி, நடிகைகள் ரைசா வில்சன், சம்யுக்தா, அம்ரிதா ஐயர் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஹீரோக்களுள் ஒருவராக நடித்திருந்த ஸ்ரீகாந்த், தன்னைப் பற்றியும் கமல், விஜய் உள்ளிட்ட முக்கிய ஹீரோக்கள் பற்றியும் சில தகவல்களை ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 

“என் பையனை பிரதர் என கூப்பிட சொல்வேன்..”

காஃபி வித் காதல் படத்தின் ஷூட்டிங் மற்றும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த நடிகர் ஸ்ரீகாந்த், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டார். அதில் அவருடைய சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் சினிமா துறைக்கு வந்து 20 வருடம் ஆகிவிட்டது, இதைப் பார்க்கும் போது நமக்கு வயதாகிவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது. இதனால் என் பையனைக் கூட, ‘அப்பா என்று கூப்பிடாதே பிரதர் என்று கூப்பிடு’ என கூறுவேன். இத்தனை நாட்கள் கடந்திருந்தாலும், நான் முதல் படத்தில் நடிப்பது போல்தான் உணர்கிறேன். அப்போதுதான் நடிப்பும் நன்றாக வரும். சினிமாவில் கால் பதித்த இத்தனை வருடங்களில் ஏற்ற இரக்கங்கள், மனப்போராட்டங்கள், தன்னம்பிக்கை என பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” எனக் கூறினார். 

கமல்ஹாசன் குறித்து ஸ்ரீகாந்தத் 

Actor Srikanth about Vijay: கமல் கொடுத்த அட்வைஸ்.. விஜய் கூட பேசறதில்ல.. நேர்காணலில் ஓப்பனாக பேசிய ஸ்ரீகாந்த்!

ஸ்ரீகாந்திடம் நடிகர் கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு மிகவும் விருப்பமான நடிகர் கமல்ஹாசன். எனது திருமணத்திற்கு முதல் ஆளாக வந்தவர்களுள் அவரும் ஒருவர். அவரது பிறந்தநாளன்று தான தர்மங்களை செய்யும் அவர், என் கையில் கொடுத்து அதை செய்ய சொல்வார். ஏன் என்று கேட்டால், அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் வர வேண்டும் என்று அதற்கு பதிலளிப்பார். நவம்பர் 7ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என கமல்ஹாசனிற்கு இனிய வாழ்த்தினை தெரிவித்தார் நடிகர் ஸ்ரீகாந்த்.  

“விஜய்யுடன் தொடர்பில் இல்லை…”

Actor Srikanth about Vijay: கமல் கொடுத்த அட்வைஸ்.. விஜய் கூட பேசறதில்ல.. நேர்காணலில் ஓப்பனாக பேசிய ஸ்ரீகாந்த்!

ஷங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற  படம் நண்பன். நடிகர்கள் விஜய், ஜீவா மற்றும் விஜய் ஆகியோர் நண்பர்களாக நடித்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால், ஸ்ரீகாந்திடம் “நடிகர் விஜய்யுடன் தொடர்பில் உள்ளீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நண்பன் படத்திற்கு முன்பு நாங்கள் நன்றாகவே பழகி வந்தோம். நண்பன் படத்தில் நண்பர்களாக நடித்தோம். ஆனால் தற்போது நான் அவருடன் தொடர்பில் இல்லை. என்னிடம் இருக்கும் ஒரு மிகப்பெரிய கெட்ட பழக்கம் என்னவென்றால், Keep in Touch என்ற பழக்கமே கிடையாது. அதனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை” என்றார். 

விரைவில் சொந்த கம்பெனி?

தொடர்ந்து நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளித்த ஸ்ரீகாந்த், விரைவில் சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கவிருப்பதாக தெரிவித்தார். இந்த பேட்டியின்போது, காஃபி வித் காதல் படத்தின் நாயகிகளுள் ஒருவரான சம்யுக்தாவும் உடனிருந்தார். 

தகவல்,உதவி-Filmi Beat

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget