மேலும் அறிய

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?

சூரி கதாநாயகனாக நடிக்கும் 7வது திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.

தமிழ் திரையுலகில் சாதாரண நகைச்சுவை நடிகராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தனது நடிப்பால் கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. விடுதலை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிய இவர் அடுத்தடுத்து கொட்டுக்காளி, கருடன், மாமன் ஆகிய படங்கள் மூலமாக கவனம் ஈர்த்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மண்டாடி படம் ரூபாய் 100 கோடி வசூலைத் தொட்டது.

சூரியின் புதிய படம்:

தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகனாக உருவெடுத்துள்ள சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. அவர் கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். அவர் நேற்று இன்று நாளை, அயலான் படங்களை இயக்கியவர்.

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிறது. ரவிக்குமார் இதற்கு முன்பு இயக்கிய இரு படங்களும் கால இயந்திரம் எனப்படும் டைம் மெஷின், ஏலியன் எனப்படும் வேற்று கிரக வாசி சார்ந்த கதையாகும்.

நகரத்து பின்னணி:

சூரி இதுவரை கிராமத்து சாயல் கொண்ட படங்களிலே நாயகனாக நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் அவர் ஒரு நகரத்து நாயகனாக புதிய அவதாரம் எடுப்பார் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த படமும் ரவிக்குமாரின் முந்தைய படங்கள் போல வித்தியாசமான திரைக்கதை கொண்ட படமாக இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தஜ் பூஜையில் சிவகார்த்திகேயன், வெற்றிமாறன் பங்கேற்று படக்குழுவை வாழ்த்தினர். சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

சூரியின் மார்க்கெட்:

சூரி கதாநாயகனாக நடிக்கும் 7வது திரைப்படம் இதுவாகும். கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் 2 படத்தைக் காட்டிலும் சூரியின் மண்டாடி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவரது செல்வாக்கு தமிழ் சினிமா உலகில் உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து அவருக்கு கதாநாயகனாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget