Vijay : மெரினாவில் காத்திருந்து தனுஷ் படத்தைப் பார்த்த விஜய்... எந்த படம் தெரியுமா?
கத்தி படத்தின் போது நடிகர் விஜய் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி பாத்தை ரகசியமாக சென்று பார்த்து வந்ததாக நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்
தி கோட்
விஜயின் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான சென்னை உள்ளிட ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முன்பதிவுகளில் அதிக டிக்கெட் விற்பனையான படமாக தி கோட் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தி கோட் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. தனது படத்தின் ரிலீஸ் ஒருபக்கம் அரசியல் செயற்பாடுகள் இன்னொரு பக்கம் என்று இருக்கும் விஜய் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சலார் படத்தைப் பாராட்டிய தகவல் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இதே போல் தனுஷின் படம் ஒன்றை சென்னை மெரின கடற்கரையில் காத்திருந்துவிட்டு விஜய் பார்த்தகாக நகைச்சுவை நடிகர் சதீஷ் விஜய் பற்றி பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மெரினாவில் காரிலே தூங்கிய விஜய்
” கத்தி படத்தின் போது ஒரு நாள் மதியமே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதற்கு சில நாட்கள் முன்பாக தான் நானும் தனுஷூம் விஜய் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தோம். அப்போது அவரது வேலையில்லா பட்டதாரி படத்தைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். விஜய் அந்த படத்தை பார்ப்பதாக சொல்லி இருந்தார். படப்பிடிப்பு மதியம் இருந்ததால் எங்களுக்கு நேரம் இருந்தது. சரி படத்திற்கு போலாம் என்று விஜய் சொன்னார். படம் போடுவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. மெரினா பீச்சில் காரை நிறுத்திவிட்டு விஜய் அப்படியே காரில் கொஞ்ச நேரம் தூங்கினார். விஜயை யாராவது பார்த்து என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக இருந்தேன். அப்போது மாஸ்கெல்லாம் இல்லை. நாங்கள் படத்திற்கு போனோம் . திரையரங்க நிர்வாகிகள் வந்து எங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்கள். விஜய் சார் தலை குணிந்தபடியே இருந்து படம் பார்த்துவிட்டு புறப்பட்டு விட்டோம். அவர் வந்து படம் பார்த்துவிட்டு போனது யாருக்குமே தெரியாது. அது எனக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது” என்று நடிகர் சதீஷ் கூறினார்
Once upon a time, Thalapathy #Vijay watched @dhanushkraja's VIP at sathyam cinemas during the Kaththi schedule. The passion towards the cinema he has @actorvijay 👌😍 pic.twitter.com/04Py0d4H8Z
— மாரி ™ (@MaariBala_Offl) September 2, 2024