மேலும் அறிய

RRR Villain Died: சோகத்தில் ரசிகர்கள்..ஆர்ஆர்ஆர் வில்லன் நடிகர் திடீர் மரணம்.. காரணம் இதுதான்..!

ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்து இருந்த ரே ஸ்டீவன்சன், தனது 58வது வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்து இருந்த ரே ஸ்டீவன்சன், தனது 58வது வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரே ஸ்டீவன்சன் மரணம்:

ராஜமவுளி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் இடம்பெற்று இருந்த  நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியது. அதேநேரம், இந்த படத்தில் ஸ்காட் துரை எனும் ஆங்கிலேய கவர்னராக நடித்து கவனம் ஈர்த்தவர், ரே ஸ்டீவன்சன். தனது கட்டுமஸ்தான உடல்வாகுவுடன், ஆங்கிலேயர்களின் சர்வாதிகாரபோக்கை அப்படியே திரையில் காட்டி அசத்தி இருப்பார். இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக தனது 58வது வயதில் ரே ஸ்டீவன்சன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாலும், அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. இவரது மரணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த ஸ்டீவன்சன்:

மார்வெல் நிறுவனத்தின் தோர் படங்களில் ஆஸ்காட் வாரியராக நடித்துள்ள இந்த ரே ஸ்டீவன்சன், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1964ம் ஆண்டு லிஸ்பர்னில் பிறந்த இவர், மூன்று சகோதரர்களில் இரண்டாவது நபராவார். தனது 8வது வயதில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்த அவர், பிரிஸ்டல் ஓல்ட் விக் தியேட்டர் பள்ளியில் படித்து பல ஆண்டுகள் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பிறகு, பால் கிரீன்கிராஸின் 1998 திரைப்படமான தி தியரி ஆஃப் ஃப்ளைட்டில் திரைப்படத்தில் அறிமுகமானார்.

சினிமாவில் ஸ்டீவன்சன்:

2004ம் ஆண்டு Antoine Fuqua's King Arthur-ல் ரவுண்ட் டேபிளில் ஒரு குதிரை வீரராக தோன்றினார்.  அதன் பிறகு டிஸ்னி மார்வெலுக்கு முந்தைய தழுவலான Punisher: War Zone-ல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அது நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், மீண்டும் மார்வெலின் மூன்று தோர் படங்களிலும் ஆஸ்காட் வாரியராக நடித்துள்ளார். இதோடு, டைவர்ஜென்ட் ட்ரையாலாஜி, ஜிஐ ஜோ: ரிடலியேஷன் மற்றும் தி டிரான்ஸ்போர்ட்டர்: ரீஃப்யூல்டு ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பல படங்களிலும் போர் வீரராக நடிப்பது குறித்து பேசிய அவர், நான் முந்தைய காலத்தில் ஒரு உண்மையான போர் வீரனாக இருந்திருப்பேன் போல என தெரிவித்துள்ளார்.

கடைசி படம் என்ன?

RRR படத்தை தொடர்ந்து தனது இறுதிப்படமாக ஆக்சிடென்ட் மேன்: ஹிட்மேன்ஸ் ஹாலிடே எனும் திரைப்படத்தில் ஸ்காட் அட்கின்ஸ்  உடன் இணைந்து ஸ்டீவன்சன் நடித்து முடித்துள்ளார். HBO மற்றும் BBC இன் ரோமின் அனைத்து 22 அத்தியாயங்களிலும் அவர் இடம்பெற்றார். அவர் சமீபத்தில் கெவின் ஸ்பேசிக்கு பதிலாக 1242: கேட்வே டு தி வெஸ்ட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதில், மங்கோலிய ராணுவத்திற்கு எதிராக நிற்கும் ஹங்கேரிய பாதிரியார் கதாபாத்திரத்தில் ஸ்டீவன்சன் நடிக்கவிருந்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget