நான்கு நடிகைகள் நாயகி...பணத்தை வாரி இறைக்கும் ரவி மோகன்..எல்லாம் எதுக்காக தெரியுமா ?
ரவி மோகன் தனது அடுத்த படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நான்கு நடிகைகள் கதா நாயகிகளாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரவி மோகன் நடிக்கும் ப்ரோ கோட்
நடிகர் ரவி மோகனின் அடுத்த படத்தை கார்த்தி யோகி இயக்கவிருக்கிறார். இவர் டிக்கிலோனா , வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியவர். எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ப்ரோ கோட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை கேட்ட ரவி மோகன் இந்த படத்தை தானே தயாரிப்பதாக முடிவெடுத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நான்கு முன்னணி நடிகைகல் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிமல் , அர்ஜூன் ரெட்டி ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Director KarthikYogi:#RaviMohan's Next film Titled as #BroCode, An Action Comedy Film😀💥
— AmuthaBharathi (@CinemaWithAB) June 9, 2025
- After narration of Story RaviMohan said that himself produce the Film, under RaviMohan Studios🎬
- #SJSuryah's character will be positive, Likable and equally important & you will witness… pic.twitter.com/cExceC1NMg
ஜெயம் ரவி தற்போது கணேஷ் கே பாபு இயக்கும் கராத்தே பாபு படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ஜீனி. இப்படத்தில் மூத்த நடிகை தேவயானி, இளம் நடிகைகளான க்ரித்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன் , வாமிகா கப்பி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது தவிர்த்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் தனி ஒருவர் 2 ஆம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். கடைசியாக ரவி மோகன் நடித்து வெளியான காதலிக்க நேரமில்லை படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது.
இயக்குநராகும் ரவி மோகன்
நடிப்பு தவிர்த்து ரவி மோகன் இயக்குநராகவும் அவதாரமெடுக்க இருக்கிறார். யோகி பாபு மையக் கதாபாத்திரமாக நடிக்க முழுக்க முழுக்க காமெடி ஜானரில் ரவி மோகன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் .





















