ஏழை குடும்பம் சிறுக சிறுக சேர்த்த 1 லட்சம் பணத்தை கரையான் அரித்த சோகம்...ராகவா லாரன்ஸ் செய்த உதவி
கூலி தொழிளாலர் ஒருவர் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கரையான் அரித்தது கேள்விபட்டு அவருக்கு உதவ முன்வந்துள்ளார் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்
குரூப் டான்ஸராக இருந்து, பின் நடன இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தைப் பிடித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இதற்கு பின் படிப்படியாக நடிப்பு, இயக்கம் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சினிமா தவிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியாக நடனம் கற்பிப்பது, அவர்களின் நலனுக்கு பல நலத் திட்டங்களை தன்னார்வல நிறுவனங்களின் உதவியுடம் முன்னெடுப்பது என களச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சேவையே கடவுள் அறக்கட்டளை
’சேவையே கடவுள்’ என்கிற அறக்கடளை ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையில் லாரன்ஸூடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்கிற செயல்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இந்தத் திட்டத்தின் வழியாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்ய இருக்கிறார். விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்குவது , பெண்களுக்கு தையல் மிஷின்களை வாங்குவது என தொடர்ச்சியாக பல உதவிகளை செய்துள்ளார். அந்த வகையில் தற்போது கூலி தொழிலாள குடுமபத்திற்கு உதவியுள்ளார்.
கரையான் அரித்த 1 லட்சம்
சிவகங்கை மாவட்டம் சுக்கனாம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பி என்கிற பெண் தனது கணவருடன் கூலி தொழில் செய்து வருகிறார். இரண்டு மகள்கள் ஒரு மகனுக்கு அண்ணையான முத்துக்கருப்பி காது குத்து விழாவிற்காக தான் வேலை செய்து சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக ஒரு தகர டப்பாவில் சேர்த்து வைத்துள்ளார். இப்படியான நிலையில் மழை பெயததால் முத்துகருப்பி சேமித்து வைத்த பணத்தை கரையான் அரித்துள்ளது. வாயை கட்டி வைத்தை கட்டி முத்துகருப்பி சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் கரையான் அரித்ததை கூறி அவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை பார்த்த ராகவா லாரன்ஸ் உடனடியாக அவரை சென்னைக்கு வரவழைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அவருக்கு கொடுத்து உதவினார். இந்த பணத்தை இழந்தது அந்த மக்களுக்கு எவ்வளவு பெரிய வலியாக இருந்திருக்கும் என்பதை தன்னால் உணர முடிந்தது என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் செய்த உதவியை ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Hi Everyone, I came across the news that a coolie family lost 1lakh of their many years of savings due to termites. My heart sank thinking about what they must’ve gone through. So, I’m happy to contribute the lost money for them. Thanks to the media and people involved in… pic.twitter.com/Rmhv3VNBNV
— Raghava Lawrence (@offl_Lawrence) May 8, 2025





















