Chandramukhi 2 shoot : சந்திரமுகி 2 ஷூட்டிங் ஆரம்பம்.. சூப்பர் ஸ்டாரிடம் ஆசி பெற்ற லாரன்ஸ்
Chandramukhi 2 shoot : சந்திரமுகி 2 படப்பிடிப்பு மைச்சூரில் எனது தலைவர் மற்றும் குருவின் ஆசிகளுடன் தொடங்கவுள்ளது.உங்கள் அனைவரின் நல்லாசிகளையும் பெற நான் விரும்புகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
![Chandramukhi 2 shoot : சந்திரமுகி 2 ஷூட்டிங் ஆரம்பம்.. சூப்பர் ஸ்டாரிடம் ஆசி பெற்ற லாரன்ஸ் Actor Raghava lawrence got blessing from rajinikanth on behalf of beginning of chandramukhi 2 shoot Chandramukhi 2 shoot : சந்திரமுகி 2 ஷூட்டிங் ஆரம்பம்.. சூப்பர் ஸ்டாரிடம் ஆசி பெற்ற லாரன்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/15/cca7e3cdcf89d4ba86d42adc9f35d44d1657864089_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மைச்சூரில் சந்திரமுகியின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த்,பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 700 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி சந்திரமுகி-2 படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
Elated to announce 🤩 our next Big project #Chandramukhi2 🗝️✨
— Lyca Productions (@LycaProductions) June 14, 2022
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu 😎
Directed by #PVasu 🎬
Music by @mmkeeravaani 🎶
Cinematography by @RDRajasekar 🎥
Art by #ThottaTharani 🎨
PRO @proyuvraaj 🤝🏻 pic.twitter.com/NU76VxLrjH
2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பு வெளியாகியது.
பேய் படங்களில் காமெடியை இணைத்து தமிழ் சினிமாவுக்கு புது ஃபார்முலாவை தனது படங்கள் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் லாரன்ஸ். நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா, சிவாலிங்கா என பல பேய் படங்களில் ஹிட் அடித்து, இப்போது சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க களம் இறங்கியுள்ளார்.
Hi friends and fans, Today Chandramukhi 2 shooting begins in Mysore with my Thalaivar and guru’s @rajinikanth blessings! I need all your wishes! 🙏🏼🙏🏼 #Chandramukhi2 pic.twitter.com/dSrD3B5Xwh
— Raghava Lawrence (@offl_Lawrence) July 15, 2022
தற்போது ராகவா லாரன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மைச்சூரில் எனது தலைவர் மற்றும் குருவின் ஆசிகளுடன் தொடங்கவுள்ளது. உங்கள் அனைவரின் நல்லாசிகளையும் பெற நான் விரும்புகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)