Premgi on Malavika: மாலத்தீவு மாளவிகாவுக்கு பிரேம்ஜி போட்ட மார்கமான ரிப்ளை.! ஷாக்கான ரசிகர்கள்!
மாளவிகா மோகனனின் புகைப்படத்தை பார்த்த நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட கமெண்ட் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனுடைய மகள் மாளவிகா மோகனன். மலையாள சினிமாவில் அறிமுகமான மாளவிகா தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இதனையடுத்து, அவர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து, தற்போது மாளவிகா மோகனன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் பொல்லாத உலகம் பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வைகளை குவித்துவருகிறது. மாறன் படத்தைத் தொடர்ந்து யுத்ரா எனும் பாலிவுட் படத்திலும் நடித்துவருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
இந்நிலையில் தொடர் ஷூட்டிங்கில் இருந்து சிறு பிரேக் எடுத்திருக்கும் மாளவிகா, ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவு சென்றிருக்கிறார். ஓய்வு எடுத்து வரும் மாளவிகா இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
பிகினி உடையில் இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் பட்டித்தொட்டி எங்கும் பரவி பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது நீல நிற பிகினி உடையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.
Chanel-ing my inner sea spirit 🧜🏻♀️🌊🏝 pic.twitter.com/3lKz8IpDKc
— malavika mohanan (@MalavikaM_) January 31, 2022
இந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பார்த்த நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி வெளியிட்ட கமெண்ட் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது. பிரேம்ஜி பதிவிட்ட கமெண்டில் மாளவிகா மோகனனின் அழகை கண்டு கண்கள் இரண்டும் இரண்டு அடி முன்னே வந்து பார்த்து பரவசமடைகிறது. இதைபார்த்த தமிழ் ரசிகர்களும் அதை அதிகளவில் ரீ - ட்வீட் செய்து வருகின்றனர்.
— PREMGI (@Premgiamaren) January 31, 2022
முன்னதாக, நீச்சல் குளத்தில் ரிலாக்ஸாக மாளவிகா மோகனன் நீச்சல் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோவையும் பலர் பகிர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்