மேலும் அறிய

Nakul Birthday: ” நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” - நகுல் பிறந்தநாளுக்கு உருக்கமாக வாழ்த்துத் தெரிவித்த மனைவி ஷ்ருதி

நடிகர் நகுலுக்கு மிக உருக்கமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அவரது மனைவி ஷ்ருதி

 நடிகர் நகுல் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். புகைப்பட குவியல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் நகுலின் மனைவி ஷ்ருதி.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் வழியாக  நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகர் , பாடகர் என் பன்முகத்திறமைக் கொண்டவர் நகுல். இன்று தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது  மனைவியான ஷ்ருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் எக்கசக்கமான புகைப்படங்களை எட் ஷீரானின் ‘ பெர்ஃபெக்ட் டூயட்’ என்கிற பாடலுடன்  சேர்த்து ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டு தனது கணவருக்கு அழகான வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் நகுல் அவரது மனைவி ஷ்ருதி . இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தத் தருணங்கள் , இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது என அவர்களின் வாழ்க்கையில் பல முக்கியமானத் தருணங்கள் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் ஒரு அழகான பிறந்தநாள் வாழ்த்து குறிப்பு ஒன்றையும் இணைத்துள்ளார் ஷ்ருதி.

பிறந்தநாள் வாழ்த்து

அதில் “ என் வாழ்க்கையின் மிகசிறந்த நபருக்குப் பொருந்தும் மிகச் சிறந்தப் பாடல். ஒரு தோழனாக, வாழ்க்கைத் துணையாக என் வாழ்வில் நான் சந்தித்த மிகக் கனிவான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றைய நாளில் நீ பிறந்ததற்காகவும் எனது வாழ்க்கையை உன்னுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காகவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்”  என மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார் நகுலின் மனைவி ஷ்ருதி.

நகுல்

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார் நகுல். பாய்ஸ் படத்தில் தனது 19 வயதில் பப்ளியாகத் தோன்றிய நகுல் இந்தப் படத்திற்குப் பின் தெலுங்கில் நடித்த ஒரு  படம் தோல்வியடைந்தது.

பாடகர்

ஒரு நல்ல ப்ரேக்கிற்காக காத்திருந்த நகுல் சில காலம் பாடகராக அவதாரம் எடுத்தார். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் யானை பாடலை மிகவும் புத்துணர்ச்சியான அவரது குரலில் பாடி அசத்தியிருந்தார். தொடர்ந்து கஜினி திரைப்படத்தில் எக்ஸ் மச்சி, வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில் பாடல் என  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தொடர்ச்சியாக பாடிவந்துள்ளார் நகுல் .

காதலில் விழுந்தேன்

2007 ஆம் ஆண்டு சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நகுல். சுனைனா இந்தப் படத்தில் இணையாக நடித்திருந்தார். நாக்கு முக்கா என்கிற பாடல் வழியாக கவனம் ஈர்த்த காதலில் விழுந்தேன் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல ஓபனிங்காக அமைந்தது. தொடர்ந்து மாசிலாமனி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகியப் படங்களில் நடித்தார் நகுல். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Embed widget