Actor Mohanlal Video: ஆதரவற்றோர் இல்லத்தில் ருக்மணி அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்!
ருக்மணி அம்மாவிடம் நேரில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது என்ன பரிசு கொடுப்பீர்கள் என்று மோகன்லால் கேட்டார்.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன் லால். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிறியவர் முதல் பெரியவர்களை இவருக்கு ரசிகராக உள்ள நிலையில், ஒரு முதியோர் ரசிகரின் ஆசையை மோகன்லால் நிறைவேற்றியுள்ளார்.
ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் ஒரு அம்மாவின் ஆசையை நடிகர் மோகன்லான் நிறைவேற்றியுள்ளார். அதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புன்குன்னத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் ருக்மணி அம்மா என்பவர் இருந்து வருகிறார். இவர், தீவிரமான மோகன்லால் ரசிகர் ஆவார். இவர், எப்போதும் மோகன் லால் பற்றியே பேசுவதால் மற்றவர்கள் இவரை கிண்டல் செய்தனர். இதனிடையே, சூப்பர் ஸ்டார் மோகன்லாலை சந்திக்க விரும்புவதாக கூறி ருக்மணி அம்மா அழுது கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து, ருக்மணி அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற மோகன்லாலின் ரசிகர்கள் சங்க உறுப்பினர்கள் முயற்சி எடுத்தனர். இதன்காரணமாக, ருக்மணி அம்மாவுக்கு வீடியோ கால் மூலம் பேசி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் மோகன் லால். அந்த வீடியோ காலில், மோகன் லாலை பார்த்தும் மகிழ்ச்சி அடையும் அந்தம்மா, பேரானாந்தத்துடன் அவரை பார்க்கிறார். அவர், மோகன்லாலிடம் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூற, அதற்கு அவர், கொரோனா தொற்று நோய் சூழ்நிலையால் நேரில் சந்திப்பது மிகவும் கஷ்டம் என்று விளக்கினார். கொரோனா நோய் எல்லாம் ஒழிந்த பிறகு வந்து சந்திக்கிறேன் என்று கூறுகிறார்.
MJ Shriram | 'SPB என் கடவுள், நான் அவரது பக்தன்'.. பிரபல பாடகர் நெகிழ்ச்சி!
அந்த வீடியோவில், ஏன் இவ்வளவு அழுகிறீர்கள் என்று மோகன்லால் அந்த அம்மாவிடம் அன்பாக கேட்பார். மேலும், உங்களுடைய வயது மற்றும் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்பார். மேலும், நிலைமை சீராகும்போது உங்களை சந்திக்க வருவேன் என்று உறுதியளித்தார். விளையாட்டுத்தனமாக, மோகன்லால் ருக்மிணி அம்மாவிடம் நேரில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது என்ன பரிசு கொடுப்பீர்கள் என்று கேட்ட பிறகு, கடைசியாக ருக்மணி அம்மாவை பார்த்து முத்தத்தை பறக்கவிட, மகிழ்ச்சியில் அந்த அம்மாவின் முகம் ஒளிரச் செய்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ருக்மணி அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மோகன்லாலுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர்.
valimai update| வலிமை படக்குழு வெளியிட்ட அடுத்த போஸ்டர் ! மாஸ் காட்டும் வில்லன்!