மேலும் அறிய

valimai update| வலிமை படக்குழு வெளியிட்ட அடுத்த போஸ்டர் ! மாஸ் காட்டும் வில்லன்!

வலிமை வில்லன் கார்த்திகேயா இன்று (செப்டம்பர் 21) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.இந்நிலையில் வலிமை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

அஜித் நடிப்பில் விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் வலிமை இந்த படத்தில் அஜித்துக்கு  வில்லனாக நடித்துள்ளார் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. தெலுங்கில் 'ஆர்.எக்ஸ்.100', 'கேங் லீடர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திகேயா. வலிமை படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.  இந்த படத்தில் இளம் வில்லனாக வலம் வரும் கார்த்திகேயா ,  தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து மிரட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்ட போதிலும் , தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்காக சிக்ஸ் பேக்கை பராமரித்தும் வந்துள்ளார். சினிமாவில் கார்த்திகேயாவிற்கு இருக்கும் ஈடுபாட்டை கண்டு மெச்சிய நடிகர் அஜித் அவரை வெகுவாக பாராட்டியதாகவும் செய்திகள் வெளியாகின. வலிமை வில்லன் கார்த்திகேயா இன்று (செப்டம்பர் 21) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், வலிமை படக்குழுவினர் அவருக்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத், இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி  நடித்து வருகிறார்.  மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ​இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜி ஸ்டியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். அஜித் நடிக்கும் 61-வது படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் எடுக்கப்பட்ட நிலையில் , இறுதியாக கார் சேஸிங் மற்றும் சண்டைக்காட்சி ஒன்றிற்காக ரஷ்யா சென்றனர் படக்குழு.

valimai update| வலிமை படக்குழு வெளியிட்ட அடுத்த போஸ்டர் ! மாஸ் காட்டும் வில்லன்!
தற்போது அந்த காட்சிகளையும் எடுத்து முடித்து நாடு திரும்பியுள்ளனர். தற்போது படம் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் உள்ளது. அதுவும் விரைவில் முடிந்துவிடும் என படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் தள்ளிப்போகும் என தெரிகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் உருவாகியுள்ளது. மாநாடு திரைப்படமும் தீபாவளிக்குத் தான் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் அதே தீபாவளி வெளியீடாக ரிலீஸ் செய்தால் அனைத்து படங்களின் வசூலிலும் பிரச்சினை ஏற்படலாம் எனப் படக்குழு கருதுகிறதாம். அதனால், வலிமை படத்தை டிசம்பர் வெளியீடாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கொரோனாவால் தமிழ் சினிமா நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில் அனைத்து பெரிய படங்களையும் ஒரே நேரத்தில் களமிறக்க வேண்டாமென தமிழ் திரையுலகினர் கருதுவதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?

Embed widget