மேலும் அறிய

Manoj | ‛நான் சொல்லுறத கேக்கல...ரஜினி சார் தப்பு பண்ணிட்டே இருந்தாரு’ - நினைவுகளை பகிர்ந்த மனோஜ்!

‘அந்த சம்பவம் திட்டமிட்டதல்ல ..எதேச்சையாக நடந்தது..என்றார். எந்திரன் படப்பிடிப்பை கோவாவில் நடத்திக்கொண்டிருந்தார்களாம் . அப்போது இயக்குநர் ஷங்கர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடித்தாராம் மனோஜ் .

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்தவர் நடிகர் பாரதிராஜா .  இவர் தமிழ் சினிமாவில் செய்த புரட்சிகளை தனி கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். இவரது மகன்  மனோஜ் . ‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா ‘ என 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்னதாக சினிமாவில் சில படங்களில் உதவி இயக்குநராக களமிறங்கினார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் , திரைப்படம் சம்பந்தமாகவும் படித்திருக்கிறார் மனோஜ். என்றாலும் கூட  அடுத்தடுத்த பல படங்களில் நடித்த மனோஜுக்கு பெரிதாக மார்கெட் உருவாகவில்லை.

Manoj | ‛நான் சொல்லுறத கேக்கல...ரஜினி சார் தப்பு பண்ணிட்டே இருந்தாரு’ - நினைவுகளை பகிர்ந்த மனோஜ்!
தந்தை பிரபல இயக்குநராக இருந்தாலும் கூட , சினிமா என்பது  மேஜிக்தானே . இது யாரை அங்கீகரிக்கும் என்பது இன்றளவு பலருக்கும் புரியாத ஒன்றாகாவே உள்ளது. தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்கும் முயற்சியில் உள்ளாராம் மனோஜ். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில்  உதவி இயக்குநராக ஷங்கருடன் பணியாற்றினார்.

படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் மனோஜ்தான் ரஜினிக்கு டூப்பாக நடித்தார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. அதனை பலர் பகிர்ந்திருப்போம். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிந்துக்கொண்ட மனோஜ். ‘அந்த சம்பவம் திட்டமிட்டதல்ல ..எதர்ச்சையாக நடந்தது..என்றார். எந்திரன் படப்பிடிப்பை கோவாவில் நடத்திக்கொண்டிருந்தார்களாம் . அப்போது இயக்குநர் ஷங்கர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடித்தாராம் மனோஜ் . படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்திற்கு , கண்களில் ரோபோ லென்ஸ் வைக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. அப்போது மனோஜ் அதற்கு பழக்கப்பட்டவர் என்பதால் அவரை படக்குழு அழைத்திருக்கிறது. உடனே ரஜினிகாந்திற்கு லென்ஸ் வைப்பதற்கு சில டிப்ஸ்களை சொல்லியபடியே , லென்ஸை பொருத்த முயற்சி செய்தாராம் மனோஜ் , ஆனால் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகும் அவர் , நான் சொல்லியபடியே கண்களை வைக்கவில்லை. அதே தப்பைத்தான் திரும்ப திரும்ப செய்தார். என்கிறார் மனோஜ். உடனே “ சார் விட்டுடுங்க...தமிழ்நாட்டுல யாரும் என்னை விட மாட்டாங்க.சூப்பர் சார் கண்ண குத்திட்டேன்னு சொல்லிடுவாங்க” என கூறினாராம் மனோஜ் . உடனே ரஜினிகாந்த் சத்தமாக சிரித்தாராம்.

Manoj | ‛நான் சொல்லுறத கேக்கல...ரஜினி சார் தப்பு பண்ணிட்டே இருந்தாரு’ - நினைவுகளை பகிர்ந்த மனோஜ்!
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பாம்பே திரைப்படத்திலும் மனோஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்த சமயத்தில் தொடர்சியான காட்சியை  தவறவிட்டதற்காக இயக்குநர் மணிரத்தினத்திடம் ஆங்கிலத்திலேயே திட்டு வாங்கினாராம் மனோஜ் . பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த சமயங்களை நினைவு கூர்ந்தவர், ”அப்பாக்கிட்டயும் நிறைய திட்டு வாங்கியிருக்கேன் ஆனால் அன்னக்கொடி படத்தில் நடித்த விதத்திற்கும், சிறப்பாக டப்பிங் செய்திருப்பதாகவும் இரவு 12 மணியளவில் அப்பா என்னை கூப்பிட்டு பாராட்டினார் “ என தனது அருமையான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget