மேலும் அறிய

சகோதரியின் திருமணத்திற்கு விஜய் சேதுபதி கொடுத்த பணத்தை வச்சு தான் இதெல்லாம் பண்ணேன்: மணிகண்டன்!

என்னுடைய சகோதரியின் திருமணத்திற்கு விஜய் சேதுபதி தான் உதவி செய்தார் என்று நடிகர் மணிகண்டன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

சூர்யா நடிப்பில் வந்த ஜெய் பீம் படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். காலா படத்தில் ரஜினிகாந்திற்கு மகனாக நடித்திருந்தார். குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் போன்று ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து தனது நடிப்பு திறமையை காட்டியிருக்கிறார்.

தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் மணிகண்டனுக்கு ஜெய் பீம் மாதிரி இன்னும் ஒரு கதை அமைந்தால் அவர் வாழ்க்கையின் அடுத்த லெவலுக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் சினிமா பாதை பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அதில், விஜய் சேதுபதி செய்த உதவி பற்றியும் கூறியிருந்தார். விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும் படத்தில் இணைந்து ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறேன்.

அப்போது ஒரு நல்ல மழை. எல்லோரும் மழைக்காக கூடாரங்களுக்கு அடியில் நின்றனர். நான் ஒரு சிறிய இடத்தில் நின்றேன். என்னுடன் விஜய் சேதுபதியும் வந்து நின்றார். நாங்கள் இருவரும் ஒரு 30 நிமிடம் பேசியிருப்போம். அந்த நேரத்தில் என்னுடைய அம்மாவின் ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட்டது. இது குறித்து அவரிடம் பேசினேன். உடனே, காரில் என்னை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அம்மாவின் மருத்துவ செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

அதே போன்று என்னுடைய சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், என்னால் அவரை நேரில் அழைக்க முடியாமல் போய்விட்டது. திருமணம் என்று மட்டும் தான் சொல்லியிருந்தேன். அவர், திருமண நாளின் போது திருமணம் முடிந்த நிலையிலும் என்னிடம் அட்ரஸ் கேட்டு வாங்கிக் கொண்டு லொகேஷனுக்கு 20 நிமிடங்களில் வந்துவிட்டார். வந்தவர் என்னிடம் ரூ.3 லட்சம் காசு கொடுத்தார். அவர் கொடுத்த அந்த காசை வைத்து தான் திருமண மண்டபத்தின் வாடகையை கொடுத்தேன். திருமண செலவுகள் போக என்னிடம் ரூ.700 மட்டும் தான் மீதம் இருந்தது. 2 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விஜய் சேதுபதி தான் எனக்கு உதவி செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget