‛முத்தழகு தான் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்...’ பருத்திவீரன் ப்ரியாமணியை கொண்டாடிய கார்த்தி!
Karthi about Priyamani : முத்தழகு எனக்கு நல்ல ஃப்ரெண்ட். என்னுடைய முதல் ஹீரோயின் இல்லையா அதனால எனக்கு எப்போவுமே ரொம்ப ஸ்பெஷல் பிரியா மணி. தேசிய விருது கிடைத்ததற்கு மிகவும் தகுதியானவர்.
Actor Karthi : முத்தழகு எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல்..."பருத்திவீரன்" அனுபவம் குறித்து கார்த்தி ஓபன் டாக்
முத்தழகு...இந்த வார்த்தையை கேட்ட உடனேயே நமக்கு சட்டுனு கண்ணு முன்னாடி பிளாஷ் அடிச்சு போறது இரெண்டு பேரோட முகம். ஒன்னு நடிகர் கார்த்தி இன்னொன்னு நடிகை பிரியா மணி. ஒரு முறை பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி கிட்ட, பிரியா மணி ஒரு கேள்வி கேட்டாங்க. மறுபடியும் நாம இரெண்டு பேரும் சேர்ந்து எப்போ நடிக்க போறோம்? இந்த கேள்விக்கு "பருத்திவீரன்" அனுபவம் பற்றி கார்த்தி என்ன பதில் சொன்னாரு பார்க்கலாம்.
பிரியாமணி ஒரு சிறந்த ஃபர்பார்மர்:
முத்தழகு எனக்கு நல்ல ஃப்ரெண்ட். என்னுடைய முதல் ஹீரோயின் இல்லையா அதனால எனக்கு எப்போவுமே ரொம்ப ஸ்பெஷல் பிரியா மணி. மிகவும் திறமையான நடிகை. இப்போது மிகவும் அழகாகவும் ஃபிட்டாகவும் இருக்கும். நாங்க இருவரும் சேர்ந்து நடித்த முதல் டைலாக் சீன் " நீ வேண்ணா என் கூட படுத்து ஒரு புள்ளைய கொடுத்துறியா...". இது முதல் சீன் என்பதால் கண்ணா பின்னான்னு பல டேக் போனது. என்ன தான் அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை செய்திருந்தாலும் கேமரா முன்னாடி நடிக்குறது கஷ்டமா இருந்துது. எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசினாரு அமீர் சார். பிறகு பிரியா மணியை மட்டும் போக சொல்லிட்டு என்கிட்டே சொன்னாரு அந்த பொண்ணு பயங்கரமா நடிக்குது. பிச்சு உதறுது. நீ மட்டும் மிஸ் பண்ண காலி. அந்த பொண்ணு உன்ன தூக்கி சாப்பிட்டுரும் என்று என்னை பயங்கரமா பயமுறுத்திட்டாரு. அது டோடல்லா மதுரை ஸ்டைல் என்பதால் ரொம்ப கஷ்டப்பட்டோம். நான் சென்னைல இருந்துகிட்டே கஷ்டப்படுறேன் அவங்க பாவம் பெங்களூரில் இருந்து வந்தவங்க. ஏற்கனேவே ஒரு 5 படம் பண்ணி இருந்தாலும் இந்த ஸ்டைல் கொஞ்சம் சிரமமா தான் இருந்துது" என்றார் கார்த்தி.
தேசிய விருதிற்கு மிகவும் தகுதியானவர் :
மேலும் "பருத்திவீரன்" படம் ஒரு கேரக்டர் சார்ந்த படம் என்பதால் மிகவும் ஸ்ட்ராங்காகா நடிக்க வேண்டி இருந்தது. என்னோட சீன் எல்லாமே சுத்திகிட்டு கூத்து அடிச்சுகிட்டு இருக்குற மாதிரி தான் இருக்கும் ஆனா பிரியா மணி சீன் ஒவ்வொன்றும் மிகவும் ஆழமாக இருக்கும். அது அனைத்தையும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். குறிப்பாக பொன்வண்ணன் சாரிடம் அடிவாங்கும் சீனில் ஏழு எட்டு குடத்துக்கு மேல உடைஞ்சுது. அழுதுகிட்டே நடிச்சாங்க. அதிலும் கிளைமாக்ஸ் சீனில் அருமையாய் நடிச்சிருப்பாங்க. ஒரு பொண்ணா அந்த சீனை உள்வாங்கி பிறகு அதை நடிப்பது என்பது சாதாரண விஷயமே இல்ல. அந்த படத்துக்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்ததற்கு மிகவும் தகுதியானவர்.
நிச்சயமாக மீண்டும் இணைவோம்:
"பையா" படம் வெளியான அந்த தருணத்தில் நானும் பிரியா மணியும் இணைந்து ஒரு படம் நடிக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு அவர் தெலுங்கு திரைப்படத்தில் மிகவும் பிஸியாகி விட்டார். ஆனால் ரசிகர்களுக்கு எங்கள் இருவரின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நல்ல திரைக்கதை அமைந்தால் நிச்சயமாக இருவரும் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிப்போம்" என்றார் நடிகர் கார்த்தி.