மேலும் அறிய

Karthi : கண்கலங்கிய நிலையில் கார்த்தி.. ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலைக்கு சர்தார் 2 படக்குழுவினர் இறுதி அஞ்சலி

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பின் போது 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலைக்கு கார்த்தி மற்றும் படக்குழுவினர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்

சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து

கார்த்தி நடித்து பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். சர்வதேச அரசியல் கதைக்களமும்  விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளும் கலந்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் உலகளவில் 100 கோடி வசூலையும் ஈட்டியது.

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கடந்த ஜூலை 15 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 

பெரும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் தொடங்கிய சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின் இரண்டாம் நாள் ஏற்பட்ட விபத்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள பிரசாத் சண்டைக் காட்சி நேற்று படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது 20 அடி உயரத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மேலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை இன்று உயிரிழந்தார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிர் இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தார்கள்.

ஏழுமலையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலையின் இறப்பு தொடர்பாக சர்தார்  2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலையின் உயிரிழப்பிற்கு சர்தார் 2 படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துக்கத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலையில் குடும்பத்துடனும் அவரது நண்பர்களுடனும் படக்குழு இருக்கும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறந்த ஏழுமலை சென்னை புது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர். சினிமாவில் பல வருடங்களாக சண்டைப் பயிற்சியாளராக இருந்த ஏழுமலையின் இறப்பு அவரது நெருங்கிய வட்டாரத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்ட ஏழுமலையின் உடலை நடிகர் கார்த்தி சென்று பார்த்து கலங்கிய முகத்துடன் இறுதி அஞ்சலியை செலுத்தினார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget