Actor Karthi on Vikram: பயமாயிருக்கு.. விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பதறி பேசிய கார்த்தி..
விக்ரம் படத்தை பார்த்த நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்.
விக்ரம் படத்தை பார்த்த நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கார்த்தி “ விக்ரம் படம் நீங்கள் சொன்னது போல, கமல் சாரை கொண்டாடுவதற்கு சரியான படம். திரையில் அவர் காட்டிய ஆக்சன் பார்ப்பதற்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது. ஆக்சன் மற்றும் காட்சிகள் அசரடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
#Vikram - as mentioned by all, a true celebration of our @ikamalhaasan sir! It’s such a high to watch him kick up a storm. Action and visuals were racy with interesting connections and surprises throughout. #FahadFaasil never lets his intensity drop.
— Actor Karthi (@Karthi_Offl) June 6, 2022
.@VijaySethuOffl brings out a new shade of baddie. @anirudhofficial…what a background score…he makes danger seem so large and the savior seem so powerful.
— Actor Karthi (@Karthi_Offl) June 6, 2022
Finally…mannnn #Rolex sir was SCARY. @Dir_Lokesh you transferred your fanboy excitement completely to the audience.
ஃபகத் ஃபாசில் ஒரு போதும் தன்னுடைய தீவிரத்தை குறைக்க மாட்டார். விஜய் சேதுபதி தன்னுடைய புதிய நெகட்டிவ் ஷேடை காண்பித்திருக்கிறார். என்ன ஒரு பின்னணி இசை.. அனிருத் ஆபத்தை பெரியதாகவும், காப்பாற்றுபவரை சக்தி வாய்ந்தவராகவும் தனது இசை மூலம் காண்பித்து இருக்கிறார். இறுதியாக, ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கே பயமாக இருந்தது. லோகேஷ் தனக்குள் இருந்த ரசிகனின் ஆசையை ரசிகர்களுக்கு கடத்திவிட்டார்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத்பாசில் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 3-ந் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்ததையடுத்து படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்தப்படம் உலக அளவில் 150 கோடியும், இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாகவும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘VIKRAM’ SCORES BIG NUMBERS IN INTERNATIONAL MARKETS… #Vikram is having a DREAM RUN #Overseas… Total till Saturday…
— taran adarsh (@taran_adarsh) June 5, 2022
⭐️ USA: $ 1,372,386 [₹ 10.65 cr]
⭐️ #UK: £ 2,86,589 [₹ 2.78 cr]
⭐️ #Australia: A$ 463,506 [₹ 2.60 cr]
⭐️ #NZ: NZ$ 47,285 [₹ 24.01 lacs]
contd… pic.twitter.com/zIC195hwib
அண்மை நிலவரப்படி, விக்ரம் திரைப்படம் அமெரிக்காவில் ரூபாய் 10.65 கோடியையும், இங்கிலாந்தில் ரூபாய் 2.78 கோடியையும், ஆஸ்திரேலியாவில் ரூபாய் 2.60 கோடியையும், நியூசிலாந்தில் ரூபாய் 24 லட்சத்தையும் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்தியில் விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. கடந்த 3 நாட்களில் ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியில் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த வசூலானது அண்மையில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற ஆர்.ஆர்.ஆர் மற்றும் கே.ஜி.எஃப் 2 படங்களின் வசூலை விட குறைவாகும்.