Actor Karthi: ‛அண்ணன் ராமன்... நான் லட்சுமணன்’ -பின்னால் நிற்க காரணம் கூறிய கார்த்தி!
எப்போதும் அண்ணனுக்கு முக்கியத்துவம் அளித்து, தான் பின்னால் நிற்பது ஏன் என்பதற்கு நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.
எப்போதும் அண்ணனுக்கு முக்கியத்துவம் அளித்து தான் பின்னால் நிற்பது ஏன் என்பதற்கு நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ லட்சுமணன் ராமனுக்கு பின்னாடி இருந்தாத்தான் அழகு. அப்பத்தான் ராமனுக்கு லட்சுமணன் பின்னாடி உட்கார்ந்திருக்கான் அப்படின்னு ஒரு தைரியம் கிடைக்கும். விருமன் படத்துல “அம்மா இருந்தா அன்பு கிடைக்கும். அப்பா இருந்தா தைரியம் கிடைக்கும்.
View this post on Instagram
அண்ணன் தம்பி இருந்தாத்தான் பலம் கிடைக்குன்னு” ஒரு வசனம் வரும். அந்த மாதிரி மூத்தவங்க ஒருத்தங்க இருக்காங்க அப்படிங்கிறது ரொம்ப பெரிய சப்போர்ட். மூத்தவர் முன்னாடி போக, நாம பின்னாடி போனாத்தான் அழகு. அது ரொம்ப நார்மல். அது ரொம்ப முக்கியமானதுன்னு நினைக்கிறேன். பேமிலி கூட சேர்ந்து இருக்குறதே அழகான விஷயம்தானே” என்று பேசினார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
View this post on Instagram
படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’
இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார்.
முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.