மேலும் அறிய

Karthi Birthday : அன்னதானம் முதல் இரத்ததானம் வரை.. கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் திட்டம்

வரும் மே 25-ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் கார்த்தி ரசிகர்கள்

கார்த்தி

தனித்துவமான படத் தேர்வுகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன் , பையா , நான் மகான் அல்ல  என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆக்‌ஷன் , ரொமான்ஸ் , ஃபேமிலி சப்ஜெக்ட் என, தான் தேர்வு செய்யும் கதைகள் எல்லா தரப்பு ரசிகர்களுக்குமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.

நடிகர் கார்த்திக்கு என்று தனி ரசிகர் அமைப்புகள் நடத்தப் பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நடிப்பு தவிர்த்து தென் இந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார் கார்த்தி.

இந்நிலையில் வரும் மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். எல்லா ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்

வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்களால் தமிழகம் முழுக்க 300-க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றன. சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

முதலாவதாக மே 12 ஆம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து மே-19, மே-26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம், நீர்மோர் வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்துகள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக மே 25-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரத்த தானம் மற்றும் உடல் தானம் செய்ய இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இரத்த தானம் செய்ய இருக்கிறார்கள். நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் செயலை கண்ட பொது மக்கள் பலரும் கார்த்தியையும் ரசிகர்களையும் வாழ்த்தி பாராட்டி வருகிறார்கள்

கார்த்தி நடித்து வரும் படங்கள்

காதலும் கடந்து போகும் , சூது கவ்வும் உள்ளிட்டப் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘ வா வாத்தியாரே ‘ படத்தி கார்த்தி தற்போது நடித்து வருகிறார். இப்படம் தவிர்த்து 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கும் மெய் அழகன் படத்திலும்  நடித்து வருகிறார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு? வானிலை அறிக்கை விவரம் இதோ..!
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு? வானிலை அறிக்கை விவரம் இதோ..!
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
Embed widget