மேலும் அறிய

Jyothika Instagram: மௌனத்தை தகர்த்திடுவோம்: ’பொன்மகள்’ ஜோதிகாவின் இன்ஸ்டா ஷேரிங்ஸ்!

ஒரு பெண் தனக்காக உரிமைக்குரல் எழுப்பும்போது தனக்கே தெரியாமல் அவள் அத்தனைப் பெண்களுக்குமாக உரிமைக்குரல் எழுப்புகிறாள்.

பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சென்னையில் அண்மையில் ஒரு பாலியல் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்த செய்தி நேற்று வைரலானது. இதையடுத்து அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அந்தப் படத்தில் நடித்த ஜோதிகா. தனது பதிவில் ‘மௌனத்தை தகர்த்திடுவோம்.ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக உரிமைக்குரல் எழுப்பும்போது தனக்கே தெரியாமல் அவள் அத்தனைப் பெண்களுக்குமாக உரிமைக்குரல் எழுப்புகிறாள்’ எனப் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Jyotika (@jyotika)

என்ன நடந்தது?

சென்னை பிராட்வே ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கமலா- முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததை அடுத்து கமலா தனது 9 வயது மகளை ஒருவருடம் முன்பு கணவரின் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் ஐந்து மாதங்கள் கழித்து மகளைத் தன்னுடன் அழைத்து வைத்துக்கொண்டுள்ளார். அப்போதுதான் தனது மகளுக்கு அந்த உறவினர் வீட்டில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கமலா தனது மகளுக்கு நேர்ந்தது குறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசன் என்பவரைக் கைது செய்தனர். 
இதற்கிடையே கடந்த ஓராண்டாக இந்த வழக்கு சென்னை உயர்நிதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் கணேசனின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கணேசனை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கபப்ட்ட சிறுமிக்கு 2 லட்சம் ருபாய் அரசு நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளார்.

குற்றவாளி பிடிபட்டது எப்படி?

கமலா தனது மகளை வீட்டு அழைத்து வந்த நிலையில் வீட்டில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அந்தப் படம் சிறார்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை குறித்தது. அதில் தாயிடம் தனக்கு நிகழ்ந்த கொடுமையை குழந்தை மறைக்கத் தேவையில்லை என்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தனக்கு நிகழ்ந்த குற்றத்தால் மனது ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சிறுமி இந்தக் காட்சியால் தாக்கம் ஏற்பட்டு தனது தாயிடம் அப்பாவின் உறவினர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டது குறித்து விளக்கியுள்ளார். கொதித்தெழுந்த கமலா உடனடியாக காவல்துறையை நாடினார். 

’பொன்மகள் வந்தாள்’

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்கும் நபரை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் ஜோதிகா மூன்று முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார்.கொரோனா பேரிடர் காலத்தில் இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
VidaaMuyarchi First Review: நடிப்பில் மிரட்டும் அஜித் குமார்; ரசிகர்களுக்கு ட்ரீட்! விடாமுயற்சி முதல் விமர்சனம்!
VidaaMuyarchi First Review: நடிப்பில் மிரட்டும் அஜித் குமார்; ரசிகர்களுக்கு ட்ரீட்! விடாமுயற்சி முதல் விமர்சனம்!
"மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேளுங்க" கிருஷ்ணகிரி விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்!
VidaaMuyarchi:
VidaaMuyarchi: "ஓட்டு முக்கியம் பிகிலு!" விடாமுயற்சிக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Election Exit Poll | அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் AAP, காங்கிரஸ் ! வெளியான EXIT POLL | BJPRahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்‌ஷன்Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடிChennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
VidaaMuyarchi First Review: நடிப்பில் மிரட்டும் அஜித் குமார்; ரசிகர்களுக்கு ட்ரீட்! விடாமுயற்சி முதல் விமர்சனம்!
VidaaMuyarchi First Review: நடிப்பில் மிரட்டும் அஜித் குமார்; ரசிகர்களுக்கு ட்ரீட்! விடாமுயற்சி முதல் விமர்சனம்!
"மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேளுங்க" கிருஷ்ணகிரி விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்!
VidaaMuyarchi:
VidaaMuyarchi: "ஓட்டு முக்கியம் பிகிலு!" விடாமுயற்சிக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து!
Vidaamuyarchi : விடாமுயற்சி தேறுமா? தேறாதா? ரசிகர்களை டென்ஷன் ஆக்கும் கதைக்களம் - வெளியானது முதல் விமர்சனம்!
Vidaamuyarchi : விடாமுயற்சி தேறுமா? தேறாதா? ரசிகர்களை டென்ஷன் ஆக்கும் கதைக்களம் - வெளியானது முதல் விமர்சனம்!
Thaipusam 2025: கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்.. பழனியில் தேரோட்டம் எப்போது?
கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்.. பழனியில் தேரோட்டம் எப்போது?
திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி
திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி
Tirupati Temple:திருமலை பணியாளர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் - திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
Tirupati Temple:திருமலை பணியாளர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் - திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
Embed widget