Actor Jegan: “கல்யாணம் முடிந்த அடுத்த நாள் ஆண்களின் சுயரூபம் தெரியும்” - நடிகர் ஜெகன் ஓபன் டாக்..!
“இடி மின்னல் காதல்” மார்ச் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இயக்குநர் பாலாஜி மாதவன், இயக்குநர் பி.வாசு குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
கல்யாணம் முடிந்த அடுத்த நாளில் இருந்து தான் ஆண்களின் சுயரூபம் தெரிய வரும் என நடிகர் ஜெகன் தெரிவித்துள்ளார்.
இடி மின்னல் காதல்
பாவகி எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் தயாரிப்பில் பாலாஜி மாதவன் அறிமுகமாகி இருக்கும் படம் “இடி மின்னல் காதல்”. இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சிபி ஹீரோவாக நடிக்கிறார். மேலும் பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ஜெகன், ராதாரவி, அருள்தாஸ் என பலரும் நடித்துள்ளனர். இடி மின்னல் காதல் படத்தில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் மார்ச் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இயக்குநர் பாலாஜி மாதவன், இயக்குநர் பி.வாசு குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.
மாட்டிக்கொண்ட ஜெகன்
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நேர்காணலில் பங்கேற்றிருந்த நடிகர் ஜெகன் பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, “நான் பெரிய பொய் சொன்னா மாட்டிப்பேன். என் மனைவி வான்மதியை காதலிக்கும் போது, அவர் என்னை ஆண் வர்க்கத்தின் சிங்கம் என நினைத்திருந்தார். நான் காதலிக்கும் எல்லா பெண்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
நீங்கள் காதலிக்கும் காலத்தில் உங்கள் காதலனை பற்றி என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளில் இருந்து தான் அவர்களின் சுயரூபம் தெரியும். தான் எவ்வளவு ஏமாந்து இருக்கிறார்கள் என்ற உண்மை புரிய வரும். இதனை பெண்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். நான் 11 ஆண்டுகளாக என் மனைவியிடம் பொய் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் என்ன சொன்னாலும் வான்மதி நம்பவே மாட்டார்” என தெரிவித்துள்ளார்.
ஜெகனின் திரையுலகப் பயணம்
2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் சினிமாவுலகில் ஜெகன் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வெளியான அயன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பையா, சிக்கு புக்கு, அம்புலி, கோ, பட்டத்து யானை, என்றென்றும் புன்னகை, வல்லினம், நான் சிகப்பு மனிதன், இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடவுள் பாதி மிருகம் பாதி, கனெக்ஷன், இங்க என்ன சொல்லுது, ரௌடி பேபி, ரன் பேபி ரன் என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஜெகன் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video : சூர்யா படத்தால் 8 மாசம் வாய்ப்பில்லாமல் போனது - நடிகர் ஜெகனின் வைரல் வீடியோ!