Jackie Shroff : டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாக்கி ஷ்ராப் மனு.. எதுக்காக தெரியுமா?
தனது தனிப்பட்ட அடையாளங்களை அனுமதியில்லாமல் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்
பிரபலங்களை போலி செய்தல்
செயற்கை தொழில் நுட்பத்தின் வருகை, மனிதர்களை ஒரு விளையாட்டுப் பொருளைப்போல் பயன்படுத்தும் காலம் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். மீம் கிரியேட்டர்கள் என்று தனியாக ஒரு கூட்டம் உருவானது போல் ஏ.ஐ தொழில்நுட்ப கலைஞர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்கள்.
பிரபல பாடல்களை வெவ்வேறு பாடகர்கள் பாடுவது போல் மாற்றுவது , நடிகர்களில் இளமை பருவ தோற்றத்தை உருவாக்குவது என ஒரு நாளைக்கு பல வீடியோக்கள் வெளியாகின்றன. செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சினிமாத் துறையில் சாதகமாக பயன்படுத்தக் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் தனி நபர்களின் கைகளில் இது சில சட்டவிரோத செயல்களையும் ஊக்குவிப்பதாகவே உள்ளது.
நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ வெளியிடுவது , அரசியல் கட்சிக்கு சார்பாக நடிகர்கள் பேசுவதுபோல் எடிட் செய்வது போன்ற ஆபத்துகளும் இதில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
தனிநபர் அடையாளங்களை பாதுகாக்கும் பிரபலங்கள்
இதன் விளைவாக பிரபல நடிகர் நடிகைகள் தங்களது அனுமதி இல்லாமல் தங்கள் தனிப்பட்ட அடையாளங்களை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் அனுமதியில்லாமல் எந்த ஒரு தனி நபரோ நிறுவனமோ தங்கள் முகத்தையோ , குரலையோ பயன்படுத்தினால் அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கு உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அப்படி பயன்படுத்தாமல் இருக்க முன்கூட்டியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் தனது தனிப்பட்ட அடையாளங்களை அனுமதியின்று பயன்படுத்துவதற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
#BREAKING
— Live Law (@LiveLawIndia) May 14, 2024
Bollywood actor Jackie Shroff files a suit before Delhi High Court seeking protection of his personality and publicity rights.
The suit has been filed against various entities using his name, photographs, voice and word “Bhidu” without his consent. @bindasbhidu pic.twitter.com/lxPmWeyToO
ஜாக்கி ஷ்ராஃப் பேசிய புகழ்பெற்ற வார்த்தையான பீடு என்கிற வார்த்தை சமீப காலத்தில் அதிகம் மீம் கிரியேட்டர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவரது குரலின் போலியை உருவாக்கியும் நிறைய ஏ.ஐ மூலம் உருவாக்கப் பட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின்றன. தனது குரலையோ தனது அங்க அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அவர் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளார்.
ஜாக்கி ஷ்ராஃப்
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜாக்கி ஷ்ராஃப் . கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் சின்ன ரோலில் வந்து ரசிகர்களை கவர்ந்து சென்றார் ஜாக்கி ஷ்ராஃப்.
தற்போது ரோகித் ஷெட்டி இயக்கும் சிங்க அகெயின் படத்தில் நடித்து வருகிறார்.