Actor Goundamani: ஓடி வந்த விஜய்.. கவுண்டமணியை கட்டியணைத்து ஆறுதல்
கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக உலா வருபவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கவுண்டமணி மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்:
இந்த நிலையில் இவரது மனைவி சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 62. அவரது மனைவியின் உடலுக்கு சத்யராஜ், செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், வையாபுரி என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்ற நடிகர் விஜய் தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய விஜய் தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் கவுண்டமணியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜய் வருவது குறித்து யாருக்கும் தகவல் தெரியாததால் ரசிகர்கள் கூட்டம் ஏற்படவில்லை.
கவுண்டமணியை கட்டியணைத்து ஆறுதல்:
கவுண்டமணியை நேரில் பார்த்த விஜய் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். கவுண்டமணியும் விஜய்யைப் பார்க்கவும் அழுதார். பின்னர், கவுண்டமணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். நடிகர் கவுண்டமணியின் மனைவியின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.





















