மேலும் அறிய

Actor Dhanush: நல்லவேளை நான் முந்திகிட்டேன் .. கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் சொன்ன சீக்ரெட் தகவல்

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

கேப்டன் மில்லர் பட விழாவில் பேசிய நடிகர் தனுஷ், அப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் தனுஷ், “சிறுக சிறுக சேர்த்த சிறு துளி (ரசிகர்கள்), பெருவெள்ளமாக இன்னைக்கு என் முன்னாடி இருக்கீங்க. இது நான் சேர்த்த சொத்து. இது அனைத்துக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இந்த படம் பற்றி யோசித்தால் உழைப்பு மட்டும் தான் நியாபகம் வரும். அப்படிப்பட்ட  அசுர தனமான உழைப்பு இதில் இருக்கும்.

எவ்வளவு அர்ப்பணிப்பு, உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் You believe devil? I am the devil என்ற வரிகள் வரும். அந்த டெவில் அருண் மாதேஸ்வரன் தான். மிருகத்தனமாக உழைப்புக்கு சொந்தக்காரர். அவர்  மற்றும் இந்த படக்குழு உழைத்த உழைப்பை பார்க்குறப்பா நான் வேலை பார்த்தேன்னு சொல்லவே கூச்சமா இருக்கு. படக்குழுவினர் என்னை பூ மாறி பார்த்து கிட்டாங்க. நான் நிறைய அறிமுக இயக்குனர் உடன் படம் பண்ணிருக்கேன். 

ஆனால் அருண் மாதேஸ்வரனை பார்க்கும்போது எனக்கு வெற்றி மாறன் நியாபகம் தான் வருகிறது. கேப்டன் மில்லர் படத்தின் கதை சொல்லும் போது பெரிய அளவில் நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பேசவில்லை. ஆனால் படம் பார்த்துவிட்டேன். இப்போ தான் அருண் ஏன் பெரிய அளவில் பேசவில்லை என புரிகிறது. இந்த படம் பண்ணும் போது நான் ராக்கி படம் பார்க்கவில்லை. ஆனால் அருண் மாதேஸ்வரன் சம்பவம் பண்ற கைன்னு புரிஞ்சிது. நல்லவேளை நான் அவரை முந்திக்கொண்டு பிடித்து விட்டேன். விரைவில் அவருடன் ஒரு படத்தில் இணையவுள்ளேன்” எனவும் தனுஷ் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget