மேலும் அறிய

Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டிற்காக தனுஷின் ஓம் படம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படம் சரஸ்வதி பூஜை கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது.

ஜெயிலர் 2-வுடன் மோதும் ஓம்:

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராக உலா வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓம். தனுஷுடன் இணைந்து இந்த படத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். இந்த ஓம் படம் வரும் அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில், ரஜினிகாந்த் படமும், தனுஷ் படமும் ஒரே நேரத்தில் வெளியானால் இரு படங்களின் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, ஓம் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதனால், ஓம் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தள்ளிப்போகிறதா ஓம்?

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் மிதுன் சக்ரபோர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிருணாள், சுராஜ், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், ஹிரித்திக் ரோஷன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஜெயிலர் 2 படம் சுமார் 250 கோடி முதல் ரூபாய் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

தனுஷின் ஓம் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். உண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஓம் படத்தை ரூபாய் 150 கோடி பொருட்செலவில் படக்குழு தயாரித்துள்ளது. தனுஷ், மம்மூட்டி ஆகியோருடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா, இந்திரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவில் அறிவிப்பு:

ஓம் படம் ஒத்திவைக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த் தனது மாமனார்  என்பதாலும், அவர் மீது தனுஷ் மிகப்பெரிய மதிப்பு வைத்திருப்பதாலும் இந்த படத்தை அவர் ஒத்திவைக்க வாய்ப்புகள் பிரகாசமாகவும் உள்ளது. தனுஷ் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கா பணிகளில் தீவிரம் காட்டி வரும் சூழலில், வெளியாகும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருப்பு படம் தவிர தமிழ் திரையுலகில் பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் இந்தாண்டு மிகப்பெரிய வசூலைக் குவிக்கவில்லை. இதனால், ஜெயிலர் 2, ஓம் படங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்போது கோலிவுட்டின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் நேர்மறையான அதிர்வலையை உண்டாக்கும் என்பதால் திரையுலகம் எப்போதும் இதுபோன்ற வெற்றியை எதிர்பார்க்கும். 

பெரிய நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் மொத ராத்திரி, மண்டாடி போன்ற படங்கள் வெற்றி பெற்று திரையுலகிற்கு சிறிய படங்கள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget