Dhanush Viral Singing Video | ”இளமை திரும்புதே..” - வைரலாகும் தனுஷ் - ஐஷ்வர்யா தனுஷ் வீடியோ..
நடிகர் தனுஷ் தனது மனைவியின் பிறந்தநாள் அன்று பாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது .
நடிகர் தனுஷ் ஒரு பின்னணி பாடகராக 'புதுக்கோட்டைலிருந்து சரவணன்' படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின்பு நிறைய ஹிட் பாடல்களை தனுஷ் பாடியுள்ளார். நட்சத்திர நடிகர் தனுஷ் தற்போது தனது ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்திற்காக யு.எஸ். இல் படப்பிடிப்பு நடத்திவரும் நிலையில், அவரது பழைய வீடியோக்களில் ஒன்று வைரலாகியுள்ளது. அவர் மனைவி ஐஷ்வர்யா தனுஷுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு பாடல் பாடி இருந்தார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ஒரு ரவுண்டு வருகிறது.
'கர்ணன்' பட நாயகனுக்கு இசை மீதான அன்பு நாம் அனைவராலும் அறியப்பட்டதே.. ரசிகர்கள் அவரது பாடல் பாடல்களின் மூலம் அவரது பாடும் திறமையை ரசித்தது மட்டுமல்லாமல், தொலைக்காட்சிகளிலும் மேடையில் ஒரு சில சந்தர்ப்பங்களிலும் அவர் பாடியதைக் கண்டு ரசித்தும் இருக்கிறார்கள் . இந்த நேரத்தில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட’ படத்தில் இருந்து "இளமை திரும்புதே” பாடல் பாடிய வீடியோ, அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது.
@dhanushkraja dedicating #IlamaiThirumbuthe to @ash_r_dhanush!!! Isn't it cute?!❤️✨🎊🌟#CoupleGoals #sweethug #love #Singing #petta #Celebration @V4umedia_ pic.twitter.com/ETxVjeTtgf
— RIAZ K AHMED (@RIAZtheboss) May 3, 2021
தனுஷ் பாடலைப் பாடுவதும், ஐஸ்வர்யா தனுஷின் அழகிய வெட்கம் கலந்த அழகான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2004-ஆம் ஆண்டில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .