மேலும் அறிய

Retta Thala: "தல” என்ற வார்த்தைக்கு தமிழ்நாட்டில் ஒரு பவர் இருக்கு - நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி

எல்லாரும் “ரெட்ட தல” டைட்டில் கேட்டதும் ரொம்ப ஆச்சரியப்பட்டோம். தல என்பது தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான ஒரு வார்த்தை தான் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் மீண்டும் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் “ரெட்ட தல”. இந்த படத்தை திருக்குமரன் இயக்குகிறார். மான் கராத்தே மற்றும் கெத்து படங்களை இயக்கிய அவர் பல வருடங்களுக்கு பிறகு ரெட்ட தல படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இப்படத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கிறார். சித்தி இத்னானி மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இயக்கும் ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தடம் படத்துக்குப் பின் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இதில் ஒரு அருண் விஜய்யின் கழுத்தை இன்னொரு அருண் விஜய் பிடித்திருப்பது போன்று இருக்கிறது. 

இதனிடையே ரெட்ட தல படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் அருண் விஜய், “நாங்க எல்லாரும் “ரெட்ட தல” டைட்டில் கேட்டதும் ரொம்ப ஆச்சரியப்பட்டோம். தல என்பது தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான ஒரு வார்த்தை தான். இந்த டைட்டிலுக்கு ஏற்றவாறு இரண்டு கேரக்டர்களுக்கும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இது எனக்கு ஒரு சவாலான விஷயம் தான். இந்த படத்துக்கான போட்டோஷூட்லேயே எனக்கு இயக்குநர் திருக்குமரனின் உழைப்பு என்ன மாதிரியானது என்பது தெரிந்தது. ஏப்ரல் 29 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறோம். ஏ.ஆர்.முருகதாஸ் 10 வருடம் இந்த டைட்டிலை வைத்திருந்தார். அவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக டைட்டிலை பெற்றுள்ளோம். அதற்கேற்ற நியாயத்தை சேர்ப்போம்” என நடிகர் அருண் விஜய் கூறினார்.  

நடப்பாண்டில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்  மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் அருண் விஜய் நடித்தார். இப்படம் கடந்த பொங்கலன்று திரைக்கு  வந்தது. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரெட்ட தல படமும் இந்தாண்டே வெளியாகும் என்பதால் அருண் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீபிள் ட்ரீட் காத்திருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget