AJITH LATEST PICS: அசத்தல் காருடன் AK! என்ன காருப்பா அது? தேடலைத் தொடங்கிய அஜித் ஃபேன்ஸ்!
ஐரோப்பியா சென்றுள்ள நடிகர் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜீத். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இவர் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். பைக் ரேஸர், ட்ரோன் தயாரிப்பாளர், துப்பாக்கிச் சுடும் வீரர் என்று பன்முகங்களை கொண்ட அஜீத் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அஜீத்தை முன்பெல்லாம் பொது இடங்களிலோ, வெளி நிகழ்விகளிலோ பார்ப்பது என்பது அரிதிலும் அரிதாகவே காணப்படும். ஆனால், வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜீத்தின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பி.எம்.டபுள்யூ பைக்கில் வலம் வரும் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது.
Morning Starts with THALA Latest Pics 🤩🤩❤️#AK | #AK61 | #AK62 |
— ᖰυᖱυⲕⲕᗝ𝜏𝜏Ꭿ⫯ (@Pudukkottai_) June 25, 2022
#AjithKumar |
pic.twitter.com/1tH56eBGXc
இந்த நிலையில் அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. நதிக்கரை ஒன்றின் ஓரத்தில் உள்ள விடுதி ஒன்றில் அமர்ந்துள்ளது போன்றும், விலையுயர்ந்த மெக்லரன் சொகுசு காரின் கதவைத் திறந்தபடியும் அதன் அருகில் அஜீத் நிற்பது போன்றும் அஜீத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பைக் ரேஸர் உடையிலும், ஐரோப்பிய நாடுகளில் டிசர்ட்டிலும் அஜீத் மெலிந்த தோற்றத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி அஜீத் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அடுத்தடுத்து அஜீத்தின் புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துப்பாக்கிச்சுடுதல், ட்ரோன் தயாரிப்பு, பைக் ரேஸ் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேசமயத்தில் ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் நடித்த பிறகு அஜீத்குமார் இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதேசமயம் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட உள்ளதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏகே 61 படத்திற்கான படப்பிடிப்பிற்கான பூஜை ஏற்கனவே நடைபெற்றுவிட்ட நிலையில், தற்போது திரைக்கதையை உருவாக்கும் பணியில் எச்.வினோத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அஜீத்தின் ஏகே 61 படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்