மேலும் அறிய

Video : எனக்கு படிப்பு சரியா வரல.. மனம்திறந்த அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ..

நடிகர் அஜித் குமார், தனது 61வது பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அமராவதி தொடங்கி ஆசை, அமர்க்களம், வீரம், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை என பல படங்களில் நடித்து தற்போது தனது 61வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

நடிகர் அஜித் குமார், தனது 61வது பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அமராவதி தொடங்கி ஆசை, அமர்க்களம், வீரம், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை என பல படங்களில் நடித்து தற்போது தனது 61வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச். வினோத். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும், மக்களின் மனங்களில் பதியும் அளவிற்கு  அவர் கதைகளை எடுத்துள்ளார். அஜித்தை வைத்து இவர் தற்போது இயக்கி இருக்கும் படம் துணிவு. இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அவரது துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் ப்ளாஷ்பேக் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் அவர் தனது படிப்பு, ஆரம்ப கால வேலை பற்றியெல்லாம் பேசியுள்ளார். அதில் அவர், எனக்கு பொய் சொல்ல விருப்பமில்லை. நான் நன்றாக படிப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். எனக்கு பள்ளியில் படிப்பு சரியாக வரவில்லை. ஆனால் எனக்கு சிறுவயதில் இருந்தே கார், பைக் மீது ஆர்வம் அதிகம். அதை ஓட்டுவதில் எவ்வளவு ஆர்வமோ அதே அளவுக்கு அதை அக்குவேராக பிரித்து சேர்ப்பதிலும் ஆர்வம் உண்டு. அதனாலேயே ஆரம்ப காலத்தில் நான் மெக்கானிக்காக வேலை பார்த்தேன். சென்னை மோட்டார்ஸில் 6 மாத காலம் அப்ரென்டீஸாக இருந்தேன். சொந்தமாக ஒரு மெக்கானிக் கராஜ் ஓப்பன் பண்ணவே ஆசை இருந்தது. ஆனால் என் வீட்டாருக்கு அது பிடிக்கவில்லை. கார் மெக்கானிக்காக இல்லாமல் நான் வேறு வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்காகவே நான் கார்மென்ட்ஸ் கம்பெனியில் மெர்கண்டைஸராக இருந்தேன். நான் சினிமாவுக்கு வந்ததெல்லாம் ஒரு விபத்து தான். இப்பவும் கூட என்றாவது ஒருநாள் ஒரு பெரிய கார்மென்ட்ஸ் ஃபேக்டரி ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

வேர்ல்டு டூர்..

அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். லைகா தயாரிக்கும் இதன் ஷூட்டிங்கில் விரைவில் இணையும் அவர், அடுத்த வருடத் தொடக்கத்தில் படத்தை முடிக்க இருக்கிறார். பின்னர், தனது நண்பர்களுடன் பைக்கில் உலகச் சுற்றுலா செல்ல இருக்கிறார். 18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அவர் பைக் டூர் செல்ல இருக்கிறார். அண்டார்டிகா உட்பட 7 கண்டங்களுக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த 18 மாதங்கள், சினிமாவுக்கு விடுமுறை அளித்துவிட்டு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அஜித். சமீபத்தில், தாய்லாந்திலும் அவர் பைக் டூரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நடிகர் அஜித் சமீபத்தில் தன்னை 'தல' என்ற அடைமொழியோடு இனி அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு 'தீனா' படத்தில் நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான 'மகாநதி' சங்கர் தான் அஜித்தை 'தல' என்று அழைப்பார். அதற்கு பிறகே அவருக்கு 'அந்த அடைமொழி' பிற படங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டது.

இப்படி எப்போதும் எளிமையாகவும், பப்ளிக் அப்பியரன்ஸை தவிர்த்தும் தனக்கு பிடித்த பாணியில் வாழும் அஜித் தான் வளர்ந்து கொண்டிருந்த காலத்திலேயே உண்மையைச் சொல்லி, மனது விரும்புவதைச் சொல்லியே வளர்ந்துள்ளர் என்பதற்கு இந்த பழைய பேட்டி சாட்சியாகியுள்ளது.

link இதோ: https://www.facebook.com/reel/597871278701202

தலைப்பு செய்திகள்

சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget