![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
‛இது வேற மாறி’ - துப்பாக்கி சுடுதலில் மாஸ் காட்டும் தல! - வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!
நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல சாகசங்களில் அஜித்திற்கு ஈடுபாடு அதிகம்.
![‛இது வேற மாறி’ - துப்பாக்கி சுடுதலில் மாஸ் காட்டும் தல! - வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ! actor ajith kumar's latest gun shooting video goes viral on internet ‛இது வேற மாறி’ - துப்பாக்கி சுடுதலில் மாஸ் காட்டும் தல! - வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/12/bf30e82083b92e56d9587e2ec28c46e1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரை சிறந்த நடிகர் என்பதை தாண்டி , இவர் சிறந்த மனிதர் என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.தான் கடைப்பிடிக்கும் டிஸிப்பிளினை தனது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என விரும்புபவர் அஜித் . கிசு கிசுக்களுக்கு அப்பாற்பட்டவர் நடிகர் அஜித், இவருக்கு நட்சத்திர ரசிகர்கள் கூட ஏராளம். நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல சாகசங்களில் அஜித்திற்கு ஈடுபாடு அதிகம் . இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் பிஸ்டல் ஒன்றை மாஸாக லோட் செய்து இலக்கை குறி பார்த்து சுடுகிறார் அஜித். இந்த வீடியோவை ‘தல ஃபார் அ ரீசன்’ என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக இது போன்ற அஜித்தின் துப்பாக்கி பயிற்சி வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
CHIEF In Action With His 🔫 Looks Mass As Always ! THALA For A Reason
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) August 12, 2021
Happy Morning To Begin With #Ajithkumar Latest Video ... #Valimai | #Thala | @AjithNetwork pic.twitter.com/t1joxOHOde
சமீபத்தில் அஜித் தனது ரசிகர் ஒரிவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தை கலக்கியது. அதில் அஜித் தனது உடல் எடையை குறைத்து சற்று சிலிம்மாக மாறியிருந்தார். இதனையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அஜித் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவது வழக்கம். நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ’வலிமை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான இறுதி கட்ட வேலைகள் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது, இதேபோல படத்தின் “நாங்க வேற மாறி “சிங்கிள் டிராக் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்த பாடலை இயக்குநரும் , தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்த பாடல் யூடியூப் பக்கத்தில் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தின் அடுத்த சிங்கிள் டிராக்கை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. வலிமை படத்தில் அஜித் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். வலிமை படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இது தவிர ’குக்வித் கோமாளி ‘புகழ், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வலிமையின் அடுத்தக்கட்ட போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)