Ajith Kumar New Year Celebration: வாவ் சொல்ல வைக்கும் அனோஷ்கா அஜித்...! ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்திய ஷாலினி...!
Ajithkumar New Year Celebration: நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
துணிவு பட ஹீரோ அஜித்குமார், சமீபத்தில்தான் பைக்கிலேயே சுற்றி தனது இந்திய பயணத்தை முடித்தார்; அது குறித்த தகவல்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது; 2023 புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தங்களது புத்தாண்டு கொண்டாட்ட போட்டோக்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள், அஜித் ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது.
ஏ.கே-வின் புத்தாண்டு கொண்டாட்டம்!
இந்த வருட புத்தாண்டை பிரபலங்கள் பலர் வெளிநாடுகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் அஜித்தும் தனது குடும்பத்தினருடன், புத்தாண்டு கொண்டாட சென்றுள்ளார். அங்கு, அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் ஒரே மாதிரியான கருப்பு நிற உடையணிந்து போஸ் கொடுத்தவாறு புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்; ஷாலினி-அஜித்தின் போட்டோக்கள் மட்டுமின்றி, அவர்களது மூத்த மகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்குடன் இணைந்து எடுத்துள்ள போட்டோக்களையும் ஷாலினி வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அஜித்தின் மகளை கொண்டாடும் நெட்டிசன்கள்:
நடிகர் அஜித், தனது தனிப்பட்ட வாழ்க்கையை கேமராவிடமிருந்து சற்று தள்ளியே வைத்திருப்பார். சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம், இவரது புகைப்படங்கள் வெளியாவதே அரிது. இவரது குழந்தைகளின் புகைப்படங்கள் கூட அவ்வப்போதுதான் கிடைக்கும். ஆனால், இவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியதிலிருந்து, கணக்கிலடங்காமல் அஜித் குறித்த பதிவுகளை வெளியான வண்ணம் உள்ளது. அஜித்-ஷாலினியின் மூத்த மகள் அனோஷ்காவிற்கு 14 வயதாகிறது. இவர், ஷாலினி வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஜிகுஜிகு உடையில் தனது அம்மாவுடன் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், “அஜித்குமாரின் குழந்தையா இது...” என வாய்பிளக்கின்றனர்.
மேலும், இவர் அழகாக இருப்பதாகக் கூறி இன்னும் கொஞ்சம் வளர்ந்தவுடன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தங்களது கருத்துகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி
அஜித்தை போலவே, அவரது மனைவி ஷாலினியும் சமூக வலைதளங்களின் பிடியில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில்தான், இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார். அதிலிருந்து, தனது கணவருடனும் குழந்தைகளுடனும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார், ஷாலினி.