மேலும் அறிய

Aishwarya Rajesh: பெண்களுக்கு என்ன தீட்டு? எந்த கடவுள் சொல்லுச்சு? பத்திரிக்கையாளர் சந்திப்பில் டென்ஷனான ஐஸ்வர்யா ராஜேஷ்..!

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான் என தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான் என தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

மலையாளத்தில் 2021 ஆம் ஆண்டு ஜோ பேபி இயக்கத்தில் வெளியான படம் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம். சூரஹ் வெஞ்சுரமுடு, நிமிஷ சஜயன் நடித்த இப்படம் அந்த ஆண்டில் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட படமாக அமைந்தது. பெண்களின் இல்லற வாழ்வில் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என ஆண்கள் நினைத்துக் கொண்டு அடிமை படுத்தும் அவலத்தையும், பெண்களது நிலைமையை புரிந்து கொள்ளாது ஆணாதிக்கம் நடப்பதையும் இப்படம் வெளிப்படையாக பேசியது. 

இந்த படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.  ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முன்னணி கேரக்டரில் நடிக்க ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முதலில் கடந்தாண்டு டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு காரணம் டிசம்பர் 30 ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மற்றொரு படமான டிரைவர் ஜமூனா வெளியாகியிருந்தது. 

View this post on Instagram
 
A post shared by Sony Music South (@sonymusic_south)

இந்நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே தேதியில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ரன் பேபி ரன்” படமும் வெளியாகவுள்ள நிலையில், இரண்டு படங்களின் மேலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “நான் இந்த படத்தை என் நெருங்கிய நண்பர்களுக்கு போட்டுக் காட்டிய போது, அதில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் தன் வருங்கால கணவரிடம் உங்க வீட்டுலையும் இப்படித்தான் பண்ணுவாங்கலான்னு கேட்டுச்சு.. அந்த அளவுக்கு ஆணாதிக்கம் என்பது எல்லா இடத்துலேயும் இருக்கு. குறிப்பாக ஊர் பக்கம் நிறைய இருக்கு” என தெரிவித்தார். 

மேலும், “பெண்களின் வாழ்க்கை சமையலறையில் மட்டுமே முடியாமல், அவர்களின் திறமைகள் வெளியே வர வேண்டும். திராவிட ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் இருக்குன்னு நினைக்கிறேன். கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் எந்த கடவுளும், என் கோயிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாதுன்னு சொல்லல. இது நம்ம உருவாக்குனது தான். ஏதாவது ஒரு கடவுள் சொல்லிருக்காரா சொல்லுங்க?” என ஊடகத்தினரிடம் கேள்வி எழுப்பினார்.  

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “எந்த கடவுளும் மாதவிடாய் சமயத்துல கோயிலுக்கு வரக்கூடாது, இதை செய்யக்கூடாது என நான் ஒரு படத்துல கூட சொல்லிருப்பேன்.இதையெல்லாம் நாம தான் உருவாக்குனோம்.  நான் எப்போதும் இவற்றையெல்லாம் நம்புவது இல்லை”  என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget