மேலும் அறிய

Actor Abhinay : அம்மா உணவகத்தில் சாப்பாடு.. அன்னையின் இறப்பு..பல போராட்டங்களுக்கு பின் முடிந்த அபிநய் வாழ்க்கை

Actor Abhinay : இறப்புக்கு முன் மன உளைச்சல் , பொருளாதார நெருக்கடி என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார் மறைந்த நடிகர் அபிநய்

கடந்த சில வருடங்களாக கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அபிநய் உயிரிழந்துள்ள தகவல் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து ஜங்ஷன், சக்சஸ், சிங்கார சென்னை, தாஸ், பொன் மேகலை, தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச்சோலை, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களில் அபிநய் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரபல பிஸ்கட் நிறுவன விளம்பரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். 

கைகொடுக்காத சினிமா

தனுஷ் மற்றும் அபிநய் இருவரும் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்கள். இப்படம் வெளியானபோது அபிநய் தான் நாயகனாக நடித்திருக்க வேண்டும் தனுஷை ஏன் நடிக்க வைத்தார்கள் என பத்திரிகைகளில் கருத்துக்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஜங்ஷன் , சிங்கார சென்னை , பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார் அபிநய். மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி அபிநய்க்கு கிடைக்கவில்லை. நடிப்பு தவிர்த்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜமாலுக்கு துப்பாக்கி மற்றும் அஞ்சான் படங்களில் டப்பிங் பேசியுள்ளார். 

அம்மா உணவகத்தில் சாப்பாடு

பெரியளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக அபிநய் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சரியான கதைகளை தேர்வு செய்யாததால் தனது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்தன . இதனால் தனது சினிமா கரியர் சறுக்கியது . அதே நேரத்தில் தனது   அம்மாவின் இறப்பு தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்ததாகவும் அபிநய் தெரிவித்துள்ளார். இவற்றுடன் தனது பொருளாதார நெருக்கடியை சமளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த அபிநய்க்கு லிவர் ஸ்லெரோசிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக் என அபிநய் வாழ்க்கையில் தொடர் போராட்டங்களை சந்தித்து வந்துள்ளார். 

கல்லீரல் நோயூடன் போராட்டம்

அபிநயின் உடல் நிலை கவலைக்கிடமாக கிடப்பது ஊடகத்தில் பெரியளவில் பேசுபொருளானது. கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ரு 27 லட்சம்  தேவைப்படுவதாக அபிநய் தெரிவித்திருந்தார். ஒரு சில மட்டும் அவருக்கு பண உதவி செய்துவந்தனர். நடிகர் பாலா அபிநயின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 1 லட்சம் வழங்கினார். அபிநய் குணமடைந்து அவர் மறுபடியும் ஆரோக்கியமாக திரும்புவார் என பலர் எதிர்பார்த்து வந்த நிலையில் அவரது இறப்பு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. தமிழ் திரையுலகினர் அபிநயின் இறப்பு தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள். 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Embed widget