மேலும் அறிய

14 வில்லன்கள்... உலக அழகி... இவர்களோடு ஆக்சன் கிங் அர்ஜுன் நடத்திய ‛அரசாட்சி’

Arasatchi : சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் ஒரு மாஸ் ஹீரோவாக "அரசாட்சி" திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் அர்ஜுன். இப்படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவு.

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் "அரசாட்சி". முரளி மனோகர், ஹரிஷ் விக்ரம், மற்றும் விஜயகுமார் இணைந்து தயாரித்த இப்படத்தினை இயக்கினார் என். மகாராஜன். 18 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதியான இன்று வெளியானது. 

அர்ஜுன் ஜோடியாக உலக அழகி அறிமுகம் :

முன்னாள் உலக அழகி பட்டம் பெற்ற லாரா தத்தா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது. இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். விவேக், எஸ்.வி. சேகர், கரண், நாசர், ரகுவரன், ஆனந்த்ராஜ், மணிவண்ணன், பி. வாசு மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

14 வில்லன்கள்... உலக அழகி... இவர்களோடு ஆக்சன் கிங் அர்ஜுன் நடத்திய ‛அரசாட்சி’

நியாயத்தின் பக்கம் அர்ஜுன் :

சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் ஒரு மாஸ் ஹீரோவாக நடித்துள்ளார் நடிகர் அர்ஜுன். அவரின் ஜோடியாக ஒரு பொம்மையை போல அவ்வப்போது வந்து போகிறார் லாரா தத்தா. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனது சகோதரியின் கணவனான தீய செயலில் ஈடுபடும் ரகுவரனை மனித சங்கிலிக்குள் சிக்க வைத்து துப்பாக்கியில் சுட்டு கொல்கிறார் அர்ஜுன். தன்னுடைய இந்த செயலுக்கான காரணத்தை ஊடகம் மூலம் தெரிவிப்பதோடு படம் நிறைவடைகிறது. 

14 வில்லன்கள் நடித்த திரைப்படம் :

இயக்குனர் மகாராஜன், நடிகர் விஜயகாந்த் நடித்த "வல்லரசு" திரைப்படத்தை இயக்கிய பிறகு இருவரும் சேர்த்து மற்றுமொரு படத்தில் ஈடுபட இருந்தனர். ஆனால் அது கைவிடப்பட்டு வல்லரசு திரைப்படத்தை ஹிந்தியில் நடிகர் சன்னி தியோலை வைத்து ரீமேக் செய்தார். அதனை தொடர்ந்து நடிகர் அர்ஜுனை இயக்கிய திரைப்படம் தான் "அரசாட்சி". இதுவரையில் எந்த ஒரு படத்திலும் இல்லாத அளவிற்கு கரண், ரகுவரன், ஆனந்தராஜ், எம்.என். நம்பியார், நாசர், பொன்னம்பலம், `மன்சூர் அலிகான், டெல்லி கணேஷ், ராஜன். பி. தேவ், தேவன், மணிவண்ணன் என 14 வில்லன்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான லாரா தத்தா அதற்கு பிறகு ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் லாரா தத்தா. தனது சிறப்பான நடிப்பிற்காக பல பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். 

தாமதமான படத்தில் ரிலீஸ் தேதி :

அரசாட்சி திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. 2003ல் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டாலும் சில சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தாமதமாகி 2004 செப்டம்பர் மாதம் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டதாலும் படம் வெளியாவது சற்று தள்ளி போனது என கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானதால் இயக்குனர் மகராஜன் இந்த இடைப்பட்ட இடைவெளியில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "ஆஞ்சநேயா" திரைப்படத்தை முடித்தே விட்டார். 

தலைப்பு செய்திகள்

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Embed widget