மேலும் அறிய

Prabhas Wedding: நடிகர் பிரபாஸுக்குத் திருமணமா? வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

பிரபாஸ் திருமணம் குறித்து ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியின் கிருஷ்ணம் ராஜு மற்றும் பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் தலைவர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நீண்ட நாள்களாக பேச்சிலராக இருந்து வருபவர் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவரது தனிப்பட்ட வாழ்க்கையும், அவர் எப்போது திருமணம் செய்யப் போகிறார் என்பதும் எப்போதும் பேசுபொருளாக இருந்தவை. சமீபத்தில் சில தகவல்களின் அடிப்படையில், `பாகுபலி’ பிரபாஸ் இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் செய்யப் போகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், நடிகர் பிரபாஸின் மாமாவும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான கிருஷ்ணம் ராஜு இதுகுறித்து விரைவில் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. 

பிரபாஸ் திருமணம் குறித்து ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியின் கிருஷ்ணம் ராஜு மற்றும் பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் தலைவர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிரபாஸ் யாரைத் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், கிருஷ்ணம் ராஜுவின் குடும்பம் விரைவில் அதனை அறிவிப்பார்கள் எனவும் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு, பிரபாஸ் ரசிகர்கள் பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர். 

Prabhas Wedding: நடிகர் பிரபாஸுக்குத் திருமணமா? வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

எனினும், இந்த விவகாரம் குறித்து நடிகர் பிரபாஸ் தரப்பிலோ, அவரது குடும்பத்தினர் தரப்பிலோ எந்தக் கருத்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மும்பையில் `ராதே ஷ்யாம்’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளின் போது, தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறித்து ஜாலியாகப் பேசியிருந்தார் நடிகர் பிரபாஸ். தனது காதல் குறித்து அவரின் கணிப்பு என்ன என செய்தியாளர் ஒருவர் கேட்க, `காதல் பற்றிய எனது கணிப்புகள் அனைத்தும் எப்போதுமே தவறாக இருந்துள்ளன.. அதனால்தான் நான் இன்னும் திருமணம் செய்யவில்லை’ எனக் கிண்டலாக கூற, மொத்த அரங்கமும் சிரித்து மகிழ்ந்தது. 

நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா அல்லது தற்போதைய தகவல்களும் வெறும் வதந்தி தானா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு
படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Donald Trump: “எங்கள்ட ஆயுதங்கள் தீர்ந்துடுமா.? கோழைகளும், துரோகிகளும் தான்..“ கொந்தளித்த ட்ரம்ப் கூறியது என்ன.?
“எங்கள்ட ஆயுதங்கள் தீர்ந்துடுமா.? கோழைகளும், துரோகிகளும் தான்..“ கொந்தளித்த ட்ரம்ப் கூறியது என்ன.?
125 ஆண்டுகள் கொண்டாட்டம்.. 60 நாடுகளில் களைகட்டிய Royal Enfield One Ride
125 ஆண்டுகள் கொண்டாட்டம்.. 60 நாடுகளில் களைகட்டிய Royal Enfield One Ride
Sierra Dark Edition First Look: ‘கருப்பு பேரழகன்‘ டாடா சியரா டார்க் எடிஷன் எப்படி இருக்கு.? SUV-ன் தனித்துவம் என்ன.? இதோ முதல் பார்வை
‘கருப்பு பேரழகன்‘ டாடா சியரா டார்க் எடிஷன் எப்படி இருக்கு.? SUV-ன் தனித்துவம் என்ன.? இதோ முதல் பார்வை
Embed widget