மியா கலீபா படத்தை டாட்டூவாகப் போட்டுக் கொண்ட டெல்லி இளைஞர்.. மியாவின் பதில் என்ன தெரியுமா?
டெல்லியில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மியா கலீஃபாவின் முகத்தை டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, மியா கலீஃபா மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் அடல்ட் பட நடிகையும், தற்போதைய மீடியா பிரபலமுமான மியா கலீஃபா மீண்டும் செய்திகளில் வந்துள்ளார். இந்த முறை அவர் செய்யாத ஒன்றிற்காக அவரது பெயர் மீடியாவில் அடிபட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மியா கலீஃபாவின் முகத்தை டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, மியா கலீஃபா மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘tattoo_artist_01’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் அந்த டாட்டூ கலைஞரின் வீடியோ சில வாரங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டு, தற்போது வைரலாகி வருகிறது.
டேப் ஒன்றின் திரையில் மியா கலீஃபா படத்தைக் காட்டியவாறு தொடங்கும் இந்த வீடியோவில், தனது டாட்டூ மீதான நுரையைத் துடைத்து, மியா கலீஃபாவின் முகம் தனது காலில் வரையப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறார். அவரது காலின் பெரும்பாலான பகுதி முழுவதும் வரையப்பட்டிருக்கும் இந்த டாட்டூவில் மியா கலீபா தனது அடையாளமான கண்ணாடியை அணிந்தபடி, புன்னகைத்துக் கொண்டிருப்பதாக அமைந்துள்ளது.
மியா கலீஃபா இந்த டாட்டூ குறித்து அறிந்தவுடன், அதனை ஊக்கப்படுத்தாமல் அதனைக் கண்டித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் பதிவிட்டுள்ளார். ``இது உண்மையில்லை என்று சொல்லுங்கள்.. இது கொடூரமாக இருக்கிறது” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திப் பதிவிட்டுள்ளார்.
எனினும் மியா கலீஃபாவின் எதிர்வினை டாட்டூ கலைஞரைப் பாதிக்கவில்லை. மியாவின் பார்வை அவர்மீது பட்டிருப்பதாக மகிழ்ந்துள்ள அவர், தனது வீடியோவுக்குக் கிடைத்துள்ள 4 மில்லியன் வியூஸ்களுக்காக நன்றி தெரிவித்து மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ``மியா கலீஃபாவிற்கும், 4 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுத் தந்துள்ள எனது இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு மிக்க நன்றி!” எனப் பதிவு செய்துள்ளார்.
இந்த டாட்டூவில் மியா கலீஃபா அணிந்திருக்கும் கண்ணாடி மிகவும் பிரபலமானது. தனது அடையாளச் சின்னமாகக் கருதப்பட்ட அந்தக் கண்ணாடியைக் கடந்த ஆண்டு ஏலத்தில் விற்றார் மியா கலீஃபா. தனது சொந்த நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கு அளிப்பதற்காக அந்தக் கண்ணாடி ஏலத்தில் விடப்பட்டது. சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை ஈட்டியது அந்த ஏலம். இந்திய மதிப்பில் இது சுமார் 73 லட்ச ரூபாய் ஆகும். ஏற்கனவே தனது அடல்ட் பட வலைத்தள அக்கவுண்ட் ஒன்றில் சம்பாதித்த பணத்தைத் தனக்கு நெருக்கமான தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தார் மியா கலீஃபா. அதன் மதிப்பு 1.6 லட்ச அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 1.17 கோடி ரூபாய் ஆகும்.