Kamalhaasan AR Rahman: கமல் ஹாலிவுட்டுக்கு சென்று படம் இயக்க வேண்டும்... அவர் இங்கு மாட்டிக்கொண்டிருக்கிறார்... ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!
உலகநாயகன் கமல்ஹாசனும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்து கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பென்ஹெய்மர் திரைப்படத்தைப் பார்த்து ரசித்தனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சேர்ந்து படங்களில் பணியாற்றுவது மட்டுமில்லை தங்களுக்குப் பிடித்தப் படங்களை சேர்ந்து பார்க்கவும் செய்கிறார்கள். இந்த முறை என்ன என்ன படங்களை பார்த்தார்கள் தெரியுமா!
உலகநாயகனும் இசைப்புயலும்
சங்கர் இயக்கிய இந்தியன் மற்றும் தெனாலி உள்ளிட்ட கமல் நடித்தப் படங்களுக்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒருவர்மீது ஒருவர் பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கிறார்கள்.
இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான இவர்கள், அண்மையில் சந்தித்து கொண்டார்கள். இந்த சந்திப்பின் போது சினிமா தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றி உரையாடிய பின் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை பார்த்தனர்.
இது தவிர்த்து கமலின் மனதிற்கு மிக நெருக்கமான படமான காட்ஃபாதர் திரைப்படத்தையும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய தருணத்தையும் பார்த்து மகிழ்ந்தார்கள். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்தார் கமல்ஹாசன்
கமல் ஹாலிவுட்டிற்கு செல்ல வேண்டும்
View this post on Instagram
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கமலைப் பற்றி பேசிய ரஹ்மான் கமலைப் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். “சினிமாவைப் பற்றி கமலின் அறிவு அபாரமானது. இந்த நாள் வரை அவர் ஏராளமான படங்களைப் பார்க்கிறார். தான் எப்போதோ பார்த்த ஒரு படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தி அதில் இருக்கும் ஒரு நுட்பமான விஷயத்தைப் பற்றி பேசுகிறார்.
அந்த வசனங்களை நியாபகம் வைத்திருக்கிறார். கமல்ஹாசன் போன்ற ஒருவர் இந்திய சினிமாவில் இருப்பது நமக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதம் ஆனால் அது அவருக்கு எந்த அளவுக்கு பயண்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. அவர் இங்கு மாட்டிக்கொண்டிருக்கிறார். அவரைப் போல் திறமையான ஒருவர் ஹாலிட்டிற்கு சென்று படம் இயக்க வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் பணம் இருந்த போதே அவர் ஹாலிவுட் சென்றிருக்க வேண்டும். அவர் இயக்கும் படம் வெற்றியடைகிறதா இல்லையா என்கிற கேள்வி இல்லாமல் அவர் முதலில் ஒரு படத்தை இயக்க வேண்டும்” என்று கமலைப் பற்றி கூறியுள்ளார் ரஹ்மான்.
மீண்டும் இணையும் கமம் - ரஹ்மான்
இந்தியன் படத்திற்கு அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். தெனாலி படத்திற்கு பின் கமலுடன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறார் ரஹ்மான்.