Pawan Kalyan on Theri: விஜய் படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண்? தற்கொலை கடிதம் அனுப்பிய ரசிகர்.. அதிர்ந்த படக்குழு!
தெறி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை கைவிடக் கோரி நடிகர் பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் இயக்குனர் ஹரிஷ் சங்கருக்கு தற்கொலை கடிதம்!
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் தெறி. இந்த திரைப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் பல விருதுகளையும் வென்றது; விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் ஷங்கர், நடிகர் பவன் கல்யாண் உடன் இணைந்து தெறி படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இன்று இயக்குனர் ஹரிஷ், பவன் கல்யாணுடன் அடுத்த படத்தில் இணையப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அந்த படம் குறித்து எந்த ஒரு தகவலையும் அவர் அறிவிக்காத நிலையில், பவன் கல்யாண் ரசிகர் ஒருவர், தெறி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை கைவிடக்கோரி இயக்குனர் ஹரிஷ் சங்கருக்கு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
A fan letter to Director & Production House.#WeDontWantTheriRemake pic.twitter.com/DXFNtU6M1y
— Fukkard (@Fukkard) December 8, 2022
அந்த கடிதத்தில் பவன் கல்யாண் ரசிகர், நடிகரையும் இயக்குனரையும் தெறி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை கைவிடக்கோரி கூறியுள்ளார். பவன் கல்யாண் ஏற்கனவே பல ரீமேக் திரைப்படங்களில் நடித்து விட்டதால் இதனை அவர் ரசிகர்கள் பெரிதாக வரவேற்கவில்லை. பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பீம்லா நாயக்' திரைப்படம் பிரபல மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதற்கு முன் பிங்க் திரைப்படத்தின் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தை வக்கீல் சாப் என்ற தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இயக்குனர் ஹரிஷ் சங்கர் நடிகர் பவன் கல்யாண் உடன் அடுத்த படத்தில் இணையப் போவதாக மட்டுமே குறிப்பிட்ட நிலையில், அந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் அவர் வெளியிடவில்லை. எனவே அது தெலுங்கு திரைப்படத்தின் தெறி ரீமேக் என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாண் 51 வயது தெலுங்கு நடிகர் தற்போது இயக்குனர் கிருஷ்ணன் அடுத்த திரைப்படமான ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருமா மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் முன்னதாக வெளியாகியிருந்தது.