மேலும் அறிய

Cinema Headlines: தொடங்கியது ரஜினிகாந்தின் கூலி! குபேரா ராஷ்மிகா மந்தனா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் - சினிமா செய்திகள் இன்று

July 5 Cinema Headlines : ரஜினிகாந்தின் கூலி பட படப்பிடிப்பு முதல் தனுஷின் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்

கூலி படப்பிடிப்பு துவக்கம்

லியோ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171 ஆவது படமான கூலி படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருது இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

குபேரா ராஷ்மிகா மந்தனா ஃபர்ஸ்ட் லுக்

சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியில் நடித்து வரும் படம் குபேரா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜூனா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் மற்றும் நாகஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

அண்ணாமலை பயோபிக்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்ற தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. .அண்ணாமலையின்  கேரக்டரில் நடிகர் விஷால் நடிக்க கூடும் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதற்கு காரணம் நடிகர் விஷாலுக்கும் ஏற்கனவே கசப்பான அரசியல் அனுபவம் உள்ளது. இடைத்தேர்தலில் போது ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் 2026 சட்டமன்ற தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுவேன் என அவரின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.  அதே போல பல மேடைகளிலும் நடிகர் விஷால் ஐ.பி.எஸ் பற்றி பேசியுள்ளது அவரின் இந்த பிளான் பற்றி தான் இருக்குமோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

மருத்துவர் விமர்சனத்திற்கு சமந்தா விளக்கம்

தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக நடிகை சமந்தாவை பிரபல மருத்துவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படியான நிலையில்  நடிகை சமந்தா நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide Nebulisation) எனப்படும் சிகிச்சையை பயன்படுத்துவதாக நடிகை சமந்தா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கல்லீரல் நிபுணரும் பிரபல மருத்துவருமான டாக்டர் பிலிப்ஸ் என்பவர் நடிகை சமந்தாவை கடுமையாக சாடி, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

“கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பல்வேறு வகையான மருந்துகளை எடுக்க வேண்டியிருந்தது.. நான் என்னிடம் அறிவுறுத்தப்பட்ட அனைத்து சிகிச்சை முறைகளையும் முயற்சித்தேன்.  மிகுந்த தகுதி வாய்ந்த நிபுணர்களால் இந்த மருந்துகள் அறிவுறுத்தப்பட்டு, பலவற்றை நானாகவே ஆய்வு செந்த பிறகு, என்னைப் போன்ற ஒரு சாதாரண நபருக்கு இவையெல்லாம் சாத்தியமாகி உள்ளது. இந்த சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. நான் இவற்றுக்கெல்லாம் செலவு செய்ய முடிவதால், நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எப்போதும் நினைத்துக் கொள்வேன். இவற்றை செய்ய முடியாதவர்களை எண்ணி வருந்துவேன். 

ஆனால் இந்த வழக்கமான சிகிச்சைகள் நீண்ட காலத்துக்கு எனக்கு சிறப்பாக செய்யவில்லை. இந்த சிகிச்சை முறை எனக்கு வேலை செய்யாமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்ய வாய்ப்புள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த இரண்டு காரணிகளும் என்னை மாற்று சிகிச்சை முறைகள் பற்றி படிக்க வழிவகுத்தன. மேலும் பல சோதனை முயற்சிகள், தோல்விகளுக்குப் பிறகு, என் உடலுக்கு நன்றாக வேலை செய்யும் சிகிச்சை முறையை நான் கண்டறிந்தேன். இந்த பாரம்பரிய மருத்துவத்துக்கான செலவு, நான் ஏற்கெனவே செலவு செய்த வழக்கமான மருத்துவ செலவை விடக்குறைவு.” என்று சமந்தா தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.

Samantha: மருத்துவ அறிவில்லாமல் ஆலோசனை, ஜெயிலில் தள்ள சொன்ன மருத்துவர்.. சமந்தா நீண்ட விளக்கப் பதிவு!

 

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget