மேலும் அறிய

எப்பதான் ரிலீஸ்? எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள்..!

சிறிய பெரிய திரைப்படங்களும் ஓடிடியை நோக்கி நகரத்தொடங்கிவிட்டன. ஆனாலும் அண்ணாத்த, வலிமை, மாநாடு போன்ற சில படங்கள் எப்போது தியேட்டர்கள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

கொரோனாவுக்கு பிறகு பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சினிமா. வழக்கமாக கொண்டாட்டத்துடன் சென்றுகொண்டிருந்த படம் வெளியீடுகள் எல்லாம் இன்று ஓடிடிக்குள் சுருங்கிவிட்டன. வேறு வழியின்றி சிறிய பெரிய திரைப்படங்களும் ஓடிடியை நோக்கி நகரத்தொடங்கிவிட்டன. ஆனாலும் அண்ணாத்த, வலிமை, மாநாடு போன்ற சில படங்கள் எப்போது தியேட்டர்கள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

இந்தப்படங்கள் தான் மீண்டும் தியேட்டர் வரவேற்பை தட்டி எழுப்பும் எனவும் தியேட்டர் உரிமையாளர்களும் காத்திருக்கின்றனர். அதேவேளையில் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமென எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் போன்ற சில திரைப்படங்களும் ஓடிடிக்கும் நகர்கின்றன. பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய திரைப்படங்கள் வரிசையில் நாயகிகளை மையமாக வைத்து முழுப் படத்தையே நாயகிகள் தாங்கிச் செல்லும்  சில திரைப்படங்களும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

1.தலைவி

எப்பதான் ரிலீஸ்? எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள்..!

தமிழ் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்து  காத்துகொண்டு இருக்கும் திரைப்படம் தலைவி. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக தயாராகவுள்ளது.  A.L விஜய் இந்த படத்தை இயக்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சுவாமி நடிக்கிறார். படத்தின் ட்ரெய்லர் வெளியீடு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.நெற்றிக்கண்

எப்பதான் ரிலீஸ்? எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள்..!

 புதுமையான கதாபாத்திரத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வந்த திரைப்படம் தான் நெற்றிக்கண். ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளிவரவிருக்கும் இப்படத்தினை அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன்,  ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரியன் படத்தின் ரீமேக்காக  தமிழில் நெற்றிக்கண்ணாக வரவிருக்கும் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

3.ராங்கி

எப்பதான் ரிலீஸ்? எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள்..!

த்ரிஷாவின் நடிப்பில் த்ரில்லர் மூவியாக உருவாகியுள்ள ராங்கி ரிலீசுக்கு தயாராக உள்ளது.  சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி இப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்னரே வெளியான நிலையில் படம் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தில் த்ரிஷா ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார்.

4.பூமிகா

எப்பதான் ரிலீஸ்? எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள்..!

ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமாக உருவாகியுள்ளது பூமிகா. கார்த்திக் சுப்பாராஜின் தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் நீலகிரியில் எடுக்கப்பட்டன. இப்படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 

5.சூர்ப்பனகை

எப்பதான் ரிலீஸ்? எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள்..!

இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் சூர்ப்பனகை உருவாகியுள்ளது. நடிகை ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீனே நா என்ற பெயரில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகவுள்ளது. ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரம் சூர்ப்பனகையின் பெயரையே படத்துக்கு படக்குழு வைத்துள்ளது. இப்படமும்வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சாம் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget