47 Years of Rajinism: இவ்வளவு பெரிய பேனரா?! ஜெயிலர் ரஜினியை கொண்டாடித்தீர்க்கும் பெங்களூர் ரசிகர்கள்!
பெங்களூரில் ரஜினிகாந்தின் 47 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கட் அவுட் வைத்து, கேக் வெட்டியுள்ளனர்.
![47 Years of Rajinism: இவ்வளவு பெரிய பேனரா?! ஜெயிலர் ரஜினியை கொண்டாடித்தீர்க்கும் பெங்களூர் ரசிகர்கள்! 47 Years of Rajinism Rajinikanth Fans Celebrates with Huge Cutouts in Bengaluru 47 Years of Rajinism: இவ்வளவு பெரிய பேனரா?! ஜெயிலர் ரஜினியை கொண்டாடித்தீர்க்கும் பெங்களூர் ரசிகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/29/3ccb74f4156e89bf911e96d814809e451661772354729175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெங்களூரில் ரஜினிகாந்தின் 47 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கட் அவுட் வைத்து, கேக் வெட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி, வயதில் 71 ஆண்டுகளை பூர்த்தி செய்தாலும் இன்றளவும் தமிழ் சினிமாவின் கிங் மேக்கராகவே உள்ளார். தவிர்க்க முடியாத உச்சநட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22 ஆம் தேதி தொடங்கப்பட்டதோடு, அன்றைய தினம் படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து படத்தில் வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் ரஜினியின் 47 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள், ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகப்பெரிய கட் அவுட்டாக மாற்றி, அதற்கு மாலைகள் அணிவித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
Jailer Rajini cut out in Bangalore!#jailer #Rajinikanth #bangalore #rajinism #viralvideo #tamilcinema pic.twitter.com/mPeZkZp5Of
— Srilibiriya Kalidass (@srilibi) August 29, 2022
#Jailer#Rajinikanth pic.twitter.com/aG8oRa0TBw
— Manobala Vijayabalan (@ManobalaV) August 29, 2022
Huge cake has been cut alongside Massive Cutout in Bangalore's Srirampuram on account of release of #Jailer poster and #47YearsOfRajinism 💥💥🙏#Rajinikanth @rajinikanth pic.twitter.com/LZXff9g9kU
— Bangalore RFC (@Bangalore_RFC) August 28, 2022
சினிமாவில் ரஜினி கடந்து வந்த பாதை என்பது மிக சுலபமானது இல்லை. ஆனால் தனது ஸ்டைல் மூலம் ரசிகர்களை அவர் எளிதில் கவர்ந்தார். பல வெற்றி, தோல்விகளைப் பார்த்த அவர் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயற்பெயரை சிவாஜி ராவ் என்ற நிலையில் தனது பெயரை ரஜினியாக மாற்றிக் கொண்டார். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தன.
படையப்பா படத்தில் வரும் வசனம் போல, இன்றளவும் வயசானாலும் அவர் ஸ்டைலும், அழகும் மாறவேயில்லை என சொல்லும் அளவுக்கு அவரது ஒவ்வொரு அசைவிலும் அந்த மேனரிசங்களை காணலாம். பாலச்சந்தர் பட்டறையிலே பட்டை தீட்டப்பட்ட ரஜினி பல இடங்களில் தனது குருநாதர் பாலசந்தரை நினைவு கூர்ந்துள்ளார். அரசியல் சர்ச்சை, தனது மகள்களின் விவாகரத்து, தன்னை சுற்றி பல நெகட்டிவான சம்பவங்கள் தொடர்ந்தாலும் ரஜினி என்றும் பாசிட்டிவ் மனிதராகவே உள்ளார். அதனால் பிற நடிகர்களின் ரசிகர்களுக்கும் அவரை பிடிக்கிறது.
@rajinikanth #47YearsOfRajinism pic.twitter.com/Lr709wi9od
— Cinema Press Club (@cinemapressclub) August 16, 2022
இதனிடையே ரஜினியின் 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ரஜினியின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா நேற்றைய தினம் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் சுதந்திர தினத்திற்கு ரஜினிகாந்திற்கு தேசிய கொடி குத்தி அழகு பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகிறது. தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம்.. அதேபோல் 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கடின உழைப்பு.. அர்ப்பணிப்பு..அவருக்கு மகளாக பிறந்ததில் பெருமை என பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து 47 Years Of Rajinism நிகழ்வை கொண்டாடும் வகையில் ரஜினி தன் மனைவி லதாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)