மேலும் அறிய

39 years Neengal Kettavai : இது தானே நீங்க கேட்டீங்க இந்தாங்க கேட்ச் இட்... பாலு மகேந்திராவின் கமர்ஷியல் ஹிட் 'நீங்கள் கேட்டவை' வந்த கதை 

நான்கு பைட் சீன், ஐந்து பாடல் இது தானே உங்களின் விருப்பம் என அனைவரின் விருப்பத்துக்காக கேட்டதை கொடுத்த 'நீங்கள் கேட்டவை' படம் இன்றுடன் 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

இருட்டில் இருந்த தமிழ் சினிமாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிப்பவர் இயக்குநர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானார். சுமார் 23 படங்களை இயக்கிய பாலு மகேந்திரா தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்றால் அது மிகையல்ல. திரைப்பட கலையை முறையாக பயின்ற ஒரு சில இயக்குநர்களில் ஒருவர். அவரின் திறமை என்ன என்பதை அவரின் படங்கள் பேசும். அப்படி கமர்ஷியல் படங்களாக வெளிவந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் படமாக்கியவர் பாலுமகேந்திரா. இந்த இயக்குநர் ஏன் கமர்சியல் படம் எடுக்க கூடாது என ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பேரில் பாலு மகேந்திரா இயக்கிய படம் தான் 1984ம் ஆண்டு வெளியான 'நீங்கள் கேட்டவை' திரைப்படம். இன்றுடன் இப்படம் வெளியாகி 39 ஆண்டுகளை கடந்துவிட்டது. 

39 years Neengal Kettavai : இது தானே நீங்க கேட்டீங்க இந்தாங்க கேட்ச் இட்... பாலு மகேந்திராவின் கமர்ஷியல் ஹிட் 'நீங்கள் கேட்டவை' வந்த கதை 

பாலு மகேந்திராவின் திரைமொழி உருவாக்கம் அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். திரையுலகில் இருந்த பலருக்கும் இவர் என்னடா இது வேற மாறி ஸ்டைலில் படத்தை கொண்டு செல்கிறாரே அதனால் கமர்ஷியல் படங்களை அது பாதித்துவிடும், ஒரு காட்சியையே  தொடர்ச்சியாக  நான்கு நிமிடத்திற்கு எல்லாம் எடுக்கிறார் இது மற்றவர்களின் ஸ்டைலையும் பாதிக்கக்கூடும் என்பதால் அவரால் கமர்ஷியல் படங்கள் எல்லாம் எடுக்க முடியாது அதனால் தான் அவர் இது போன்ற படங்களை இயக்குகிறார் என விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான்கு ஃபைட் சீன், ஐந்து பாடல் இது தானே உங்களின் விருப்பம் என அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக படத்தின் பெயரையும் 'நீங்கள் கேட்டவை' என்றே வைத்து வெளியிட்ட படம் தான் இது.

நடிகர் தியாகராஜன், பானுசந்தர், சில்க் ஸ்மிதா, அர்ச்சனா, பூர்ணிமா பாக்யராஜ்  உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக பட்டி தொட்டி எங்கும்  வெற்றி பெற்று வசூலையும் குவித்தது. 

ஒரு அம்மா தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் அம்மாவை யாரோ வன்கொடுமை கொன்று விடுகிறார்கள். அதற்கு பிறகு மகன்கள் இருவரும் சூழ்நிலையால் பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் வளர்ந்து பிறகு ஒன்றாக சேர்ந்து அம்மாவின் இறப்புக்கு காரணமாக இருந்த நபரை தேடி கண்டுபிடித்து எப்படி பழி வாங்குகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. 

39 years Neengal Kettavai : இது தானே நீங்க கேட்டீங்க இந்தாங்க கேட்ச் இட்... பாலு மகேந்திராவின் கமர்ஷியல் ஹிட் 'நீங்கள் கேட்டவை' வந்த கதை 

அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இளையராஜாவின் இசையில் அடியே மனம் நில்லுனா நிக்காதடி, கனவு காணும் வாழ்க்கையாவும், நானே ராஜா, ஓ வசந்த ராஜா, பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா என பல ஜானர்களில் வந்த  அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வெற்றி பெற்றன. 1984 சமயத்தில் திருமணம், காதுகுத்து, கருமாரி என என்ன நடந்தாலும் 'அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி' என்ற பாடல் தான் அனைத்து இடத்திலும் ஒலித்தது.  

பாலு மகேந்திரா - இளையராஜா காம்போ படங்களில் எப்போதுமே ஒரு விதமாக மேஜிக் இருக்கும். அதற்கு சான்று அவர்களின் படங்கள். பாலு மகேந்திரா மொத்தம் 23 படங்கள் இயக்கியுள்ளார் என்றால் அதில் 21 படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். அப்படி அவர்களின் கூட்டணியில் வெளிவந்த இந்த பாடல்கள் என்றுமே பிளே லிஸ்டில் இடம்பெறும் எவர்க்ரீன் பாடல்கள் தான். 

பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இந்த கமர்சியல் படம் வெளியாகி 39 ஆண்டுகளை கடந்த போதிலும் அவரின் நினைவை சுமக்கும் ஒரு சித்திரம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget