மேலும் அறிய

3 years Celebration...! :"நோ மீன்ஸ் நோ...!" பெண்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொடுக்கும் நேர்கொண்ட பார்வை..!

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நடிகர் அஜித் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையை ஒரு புதிய கோணத்தில் காட்டிய படம் நேர்கொண்ட பார்வை.

பாலிவுட்டில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பிங்க். இந்த படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட நேர்கொண்ட பார்வை  கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நடிகர் அஜித் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையை ஒரு புதிய கோணத்தில் காட்டிய படம் இது. பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களின் நிலையை ஒரு புதிய கோணத்தில் எடுத்து கூறிய படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வெளியானது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. 

தாறுமாறான விமர்சனங்களை எதிர்கொண்ட படம்!

எப்போதும் 'மாஸ்' ஹீரோவாகவும், க்ளாசிக் கேங்ஸ்டராகவும் அவதாரம் எடுத்து வந்த நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வையில் மிகவும் வித்தியாசமாக, மனஅழுத்தத்திற்கு ஆளான வழக்கறிஞர் ரோலில் நடித்தார். பிங்க் படத்தில் அமித்தாப் பச்சனிற்கு வைக்கப்படாத சண்டைக்காட்சி, அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்த அஜித்திற்காக வைக்கப்பட்டது. வில்லன்களை வெறி கொண்டு அடித்து துவம்சம் செய்யும் காட்சி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. அது மட்டுமன்றி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறித்து இவர் எடுத்துறைக்கும் ‘க்ளைமாக்ஸ்’ காட்சி ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

Also Read|விஜய் என்றாலே இப்படித்தான்.. அமீர்கான் சொன்ன ஒத்த வார்த்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி" target="_blank"rel="dofollow">Also Read|விஜய் என்றாலே இப்படித்தான்.. அமீர்கான் சொன்ன ஒத்த வார்த்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

கதையின் கரு:

கதையின் படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மூன்று பெண்களுகளை பற்றியும் அவர்களுக்கு ஓய்வு பெற்ற வழக்கறிஞர் எப்படி நீதி வாங்கித்தருகிறார் என்பதை பற்றியும் அமையப்பெற்ற கதை இது. பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்கள், தங்களுக்குரிய நீதியை பெறுவதற்காக எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதையும், அப்படி பாதிக்கப்படும் பெண்களை இந்த சமூகம் எப்படி பாடாய் படுத்துகிறது என்பதையும் ஆழமான கதையோட்டத்துடன் எடுத்துக்கூறிய படம் நேர்கொண்ட பார்வை. 

“ஒரு ஆண் செய்யும் பாலியல் குற்றங்களுக்கு பெண் தான் காரணமாக இருக்க முடியும்” என்ற சமூகத்தின் தவறான புரிதலை அழகாக விளக்கிய நேர்கொண்ட பார்வை, அதற்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களுக்களின் நிலையையும் காட்டத் தவறவில்லை. தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குரல் கொடுக்கும் பெண்களை, இந்த சமூகம் எப்படி ‘விக்டிம் ப்ளேமிங், ஸ்லட் ஷேமிங்’ ஆகியவற்றிற்குள் அடக்க பார்க்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டி காட்டியது நேர்கொண்ட பார்வை. இப்படத்திற்கு பெண்கள் தரப்பில் பலமான ஆதரவு கிடைத்தது. 

இந்த படத்திற்கு பிறகு தான் “நோ மீன்ஸ் நோ தான்” என்பதற்கான அர்த்தமே சில பேருக்கு புரிந்தது. ஒரு பெண் ஒரு ஆணுடன் இரவில் தனியாக வெளியே செல்கிறாள் என்பதாலோ, அவனுடன் சேர்ந்து க்ளப்-பப் என்று சுற்றுவதாலோ அவள் தன்னை தொடுவதற்கான சுதந்திரத்தை கொடுத்து விட்டாள் என்று அர்த்தம் இல்லை என்பதை தெளிவாக கூறிய படம் இது.

படத்தை பார்த்த ஒரு கூட்டம்  “ பெண்களின் நிலையை எடுத்து சொல்ல இப்படியொரு படம் வந்ததே” என்று ஆனந்த கண்ணீர் விட, சில கூட்டம் “அதெப்படி அந்த நேரத்தில் அவனுடன் அந்த இடத்திற்கு தனியாக போன ‘இவள்’ அவன் மீது குற்றம் சாட்ட முடியும்” என படத்தின் நோக்கத்தையே புரிந்து கொள்ளாமல் பிதற்றி வந்தனர். 

திரையரங்கில் படம் பார்த்தவர்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக அஜித் பேசிய “நோ மீன்ஸ் நோ” பஞ்ச் டைலாக்கிற்கு கை தட்டியதை விட, ரங்கராஜ் பாண்டே பெண்களுக்கு எதிராக பேசிய டையலாக்குகலக்கு தான் அதிகமான கைதட்டல்களும், விசில்களும்  பரந்தது. 

நேர்கொண்ட பார்வை வெளியான புதிதில் “மக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்கருவைக் கொண்ட படம்” என தமிழ் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. பின்னர், மெல்ல மெல்ல  இப்படத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள், இன்று “இந்த படத்தையா இப்படி சொன்னோம்” என்று வருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Embed widget