Rekha: ஜெமினி கணேசன் மகள் ரேகாவை பற்றி சுவாரஸ்யமான 20 தகவல்கள்!
நடிகை ரேகா என்றவுடன் நீங்கள் அடி ஆத்தாடி எனப்பாடும் கடலோரக் கவிதைகள் ரேகாவை நினைக்கலாம். ஆனால் இது அந்த ரேகா அல்ல.
நடிகை ரேகா என்றவுடன் நீங்கள் அடி ஆத்தாடி எனப்பாடும் கடலோரக் கவிதைகள் ரேகாவை நினைக்கலாம். ஆனால் இது அந்த ரேகா அல்ல. ஜெமினிகணேசனின் மகள் பாலிவுட் நடிகை ரேகா. அவர் பற்றி நமக்கு எல்லோருக்கும் தெரிந்த தகவல் அவர் ஜெமினி கணேசனின் மகள் என்பது மட்டுமே. ஆனாலும் அறியப்படாத பல சுவாரஸ்ய தகவல்கள் இருக்கின்றன.
1. ரேகா 1954ல் சென்னையில் பிறந்தார். அக்டோபர் 10 அவரது பிறந்தநாள். அவரது பெற்றோருக்கு அவருக்கு பானுரேகா கணேசன் எனப் பெயர் வைத்தனர்.
2. ரேகாவின் தாயார் தெலுங்கு நடிகை புஷ்பவள்ளி. அவரது தந்தை தென்னிந்திய நடிகர் ஜெமினி கணேசன். ரேகா பிறந்தபோது ஜெமினி, புஷ்பவள்ளி முறைப்படி திருமணம் செய்திருக்கவில்லை. ரேகாவுடன் பிறந்தவர் ஒரு சகோதரி.
3. ரேகாவையும் அவரது தாயையும் ஜெமினி கணேசன் கவனிக்கவில்லை. புறக்கணித்தார் என்று சில தகவல்கள் உள்ளன.
4. ரேகா தன் சிறுவயதில் இருந்தே ஏர்ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கு அந்த வயது எட்டவில்லை என்பதால் அவரால் ஏர்ஹோஸ்டஸ் ஆக முடியவில்லை.
5. சிறுவயதில் அவர் ஒரு ஐரிஷ் பள்ளிக் கூடத்தில் படித்தார். அப்போது அவர் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்றும் விரும்பியதாக சில தகவல்கள் உண்டு.
6. ரேகா தனது 13வது வயதில் பள்ளிப்படிப்பை துறந்தார். பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட்டில் வாய்ப்புகளை தேடினார்.
7. அவரது குடும்பத்தின் வறுமை நிலை காரணம் தெலுங்கு திரையுலகில் பி, சி கிரேட் ரோல்களிலேயே அவர் நடிக்க நேர்ந்தது.
8. ரேகா தனது சக நடிகரான வினோத் மெஹ்ராவை சிறுவயதில் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக தகவல் உண்டு. ஆனால் அதனை இருவருமே மறுத்தனர்.
9. ரேகா, சினிமா துறையிலேயே முதல் முதலில் ஜிம்முக்கு சென்று நீச்சல், உடற்பயிற்சி கற்றுக்கொண்ட நடிகை என்ற பெயரைப் பெற்றார்.
10. பாலிவுட் உலகில் அவருக்கு நெருங்கிய தோழி ட்ரீம் கேர்ள் ஹேமாமாலினி.
11. ரேகா எப்போதும் நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்.
12. ரேகாவுக்கு மேக்கப் செய்வது என்றால் அவ்வளவு பிரியம். அதனாலேயே அவர் ஏர் ஹோஸ்டஸ்களை தோழிகளாக்கிக் கொண்டு உலகம் முழுவதும் இருந்து பெஸ்ட் மேக்கப் பொருட்களை வரவழைத்துக் கொள்வார்.
13. அவருடைய ஃபேஷன் சென்ஸ் பாலிவுட்டையே வியக்கவத்தது. அதுவும் பாலிவுட் உலகிற்கு காஞ்சிபுரம் பட்டின் பெருமையை கொண்டு சேர்த்ததே ரேகா தான் என்றால் அது மிகையாகாது.
14. தனக்கு ஒருபோது ஒரு ஸ்டைலிஸ்டை ரேகா வைத்துக் கொண்டதில்லை. அவர் எப்போதும் எவர்க்ரீன் ப்யூட்டியாக இருக்கிறார்.
15. அவருக்கு நடிப்பு மட்டுமல்ல பாட்டும் கைவந்த கலை தான். அவர் ஆர்.டி.பர்மன் இசையில் கூப்சூரத் படத்தில் பாடியிருக்கிறார். இந்தியன் ஐடல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் பாடியிருக்கிறார்.
16. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இல்லை இல்லை அவர் முகேஷ் அகர்வால் என்ற தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரே ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
17. ரேகாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. பாடுவதைத் தவிர அவர் மிமிக்ரியும் செய்வார். நீத்து சிங்கிற்காக யாரானா படத்தில் டப் செய்திருப்பார். வாரிஸ் படத்தில் ஸ்மிதா பாடீல் குரலில் பேசியிருப்பார்.
18. ரேகா தனது கருப்பு நிறத்திற்காக நிறவெறி விமரசனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.
19. ரேகா அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித் கான், அக்ஷய் குமார், சஞ்சய் தத் எனப் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டிருக்கிறார்.
20. ரேகா ஃப்லிம் ஃபேர், ஸ்டார் ஸ்க்ரீன், ஐஐஎஃப்ஏ போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். உம்ராவோ ஜான் படத்தின் நடித்தற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.