மேலும் அறிய

15 Years Of IronMan: தத்தளித்த மார்வெல்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த அயர்ன் மேன்..! 15 ஆண்டுகள் நிறைவு..!

உலகம் போற்றும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்றான அயர்ன் - மேன் கதாபாத்திரம் உருவாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

உலகம் போற்றும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்றான, அயர்ன் - மேன் கதாபாத்திரம் உருவாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

அயர்ன் - மேனின் தொடக்கம்:

அமெரிக்காவின் பழமையான காமிக்ஸ் நிறுவனமான மார்வெல் அதளபாதாளத்தில் சிக்கியிருந்த நிலையில், கையிலிருந்த பணத்தை எல்லாம் கொட்டி இதுவே எங்களின் கடைசி முயற்சி என எடுத்த திரைப்படம் தான் அயர்ன் - மேன். இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் எப்படியும் தப்பி பிழைத்து விடலாம் என மார்வெல் நிறுவனம் எண்ணி இருந்த நிலையில், அப்படத்தின் முடிவோ யாருமே எதிர்பார்த்திடாத ஒரு பிரமாண்ட வெற்றியை பெற்று, சூப்பர் ஹீரோ படங்களுக்கு என ஒரு புதிய பாதையையே கட்டமைத்து கொடுத்தது.

அந்த அயர்ன் - மேன் திரைப்படம் கொடுத்த வெற்றியின் விளைவால் தான், மார்வெல் நிறுவனம் தனது ஒவ்வொரு திரைப்படம் மூலமும் தற்போது பல ஆயிரம் கோடிகளை வசூலாக வாரிக்குவித்து வருகிறது. இத்தனை பெருமைக்கு உரித்தான அயர்ன் மேன் திரைப்படம், இதே மே 2ம் தேதி தான் கடந்த 2008ம் ஆண்டு வெளியாக உலகம் முழுவதும் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக அள்ளியது.

நல்லவரா? கெட்டவரா?    

அயர்ன் - மேன் என்பவர் ஓடி ஓடி மக்களுக்கு உதவி செய்பவரோ, இறக்க குணம் கொண்டவரோ என யாரும் கருத வேண்டாம். தனது அதீத திறமையால் தந்தையின் நிறுவனத்தை மேம்படுத்தி  இளம் வயதிலேயே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானதோடு, தனக்கு பிடித்தவாறு மது - மாது என வாழ்க்கையை வாழும் ஒரு பணக்கார இளைஞர் தான் இந்த டோனி ஸ்டார்க் எனப்படும் அயர்ன் - மேன் கதாபாத்திரம்.

ஒரு நாள் திடீரென ஒரு மோசமான சூழலில் சிக்கிக் கொள்ள,  தன்னை அதிலிருந்து தற்காத்துக்க்கொள்ள ஸ்டார்க் உருவாக்கும் கவசத்தின் பெயர் தான் அயர்ன் - மேன். அதன்பிறகு தான் அவர் படிப்படியாக ஹீரோவாக மாறுவார். நக்கல், கிண்டல், கோபம், காதல் மற்றும் தனிமை என அனைத்திலும் அவருடைய தனித்துவமான கதாபாத்திர வடிவமைப்பும், அதற்கு ராபர்ட் டோனி ஜூனியர் அளித்த உயிரோட்டமான நடிப்புமே அயர்ன் மேன் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்க காரணமாகும்.

ராபர்ட் டோனி ஜூனியர்:

காமிக்ஸ் கதாபாத்திரமான அயர் மேனின் குணங்களை அப்படியே உண்மையான வாழ்வில் தன்னகத்தே கொண்டிருந்தவர் தான் ராபர்ட் டோனி ஜூனியர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி வாழ்க்கையையே தொலைத்து நின்ற நிலையில், அவருக்கு அயர்ன் மேன் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு அவர் வெறும் 20 கோடி ரூபாய் தான் ஊதியமாக வாங்கினார். ஆனால், வெறும் நான்கே ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அவெஞ்சர்ஸ் படத்திற்காக அவருக்கு 400 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது.

அதோடு அவரது இறுதி மார்வெல் படமான எண்ட் கேமில், ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது அவரது கதாபாத்திரம் மார்வெல் படங்களில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை காட்டுகிறது. ஒருமுறை ராபர்ட் டோனி ஜுனியரை அயர்ன் மேனாக திரையில் பார்த்துவிட்டால், வேறு எந்த ஒரு நடிகரையும் அந்த கதாபாத்திரத்தில் எந்த ஒரு ரசிகனாலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அயர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியவரும், மார்வெல் காமிக்ஸின் பிதாமகனுமான மறைந்த ஸ்டான் லீ ஒருமுறை ராபர்ட் டோனி ஜூனியர் குறித்து பேசும்போது, ’அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்காகவே பிறந்தவர்’ என பாராட்டியதே இதற்கு சான்று. மனிதன் அந்த அளவிற்கு அயர்ன் - மேனாகாவே திரையில் வாழ்ந்து இருப்பார். குறிப்பாக அவர் கூறும் ஒன் லைன் பஞ்ச்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ்:

அந்த அயர்ன் மேன் திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தான், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்ப்படும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் உருவாகியுள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை வெளியான அனைத்து மார்வெல் திரைப்படங்களிலும்,  அயர்ன் - மேன் கதாபாத்திரம் தான் முக்கிய பங்கு வகிக்கும். அந்த யூனிவர்ஸிற்கான பெரும்பாலான வில்லன்களை உருவாக்கியதும் அவர் தான், அந்த யூனிவர்ஸின் பெரும் வில்லனான தானோஸை கொன்றதும் அவர் தான்.

இதற்காக தொழில்நுட்பத்தை மட்டுமே தன்னகத்தே கொண்ட வெறும் அயர் - மேன், கடவுளாகவே மாறியிருப்பார். ”i am iron man” என அயர்ன் - மேன் முதல் பாகத்தில் அவர் சொன்ன வசனத்தில் இருந்து தொடங்கிய, மார்வெலின் இன்பினிட்டி சாகாவின் பயணம் அதே ”i am iron man” என்ற வசனத்தின் மூலம் தான் எண்ட் கேம் படத்துடன் நிறைவடைந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக ஈட்டியது. அதன் பிறகு அயர்ன் - மேன் மார்வெல் சினிமாக்களில் தோன்றாவிட்டாலும், இன்றளவும் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் அனைத்து மார்வெல் படங்களிலும் காணப்படுகிறது.

உள்ளூர் சினிமா டூ உலக சினிமா:

அயர்ன் - மேன் வெற்றியை தொடர்ந்து உருவான மார்வெல் சினிமாடிக் யூனிஒவர்ஸ் பானியை  தான் தற்போது, உலகின் பல்வேறு முன்னணி திரைப்பட நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. குறிப்பாக டிசி யூனிவர்ஸ், மான்ஸ்டர் யூனிவர்ஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ், பாலிவுட்டில் ஸ்பை யூனிவர்ஸ் மற்றும் கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் கூட அயர்ன் - மேன் பட பாணியை பின்பற்றி தான் உருவாகியுள்ளது.  அந்த கதாபாத்திரம் சூப்பர் ஹீரோ படங்களுக்காக உருவாக்கிக் கொடுத்த களம் அத்தகையது. திரைப்படத்தில் அந்த கதாபாத்திரம் கொல்லப்பட்டாலும், ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்பது தான் உண்மை. ஏனென்றால், “வி லவ் யூ 3000 டைம்ஸ்” அயர்ன் - மேன்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலைThirumavalavan | ”ஆதவ் கட்டுப்பாட்டில் நானா?திமுகவை பார்த்தால் பயமா?” திருமா ஒப்புதல் வாக்குமூலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget