R Sabarinathan TVK: அன்று விஜய் தூக்கி கொஞ்சிய குழந்தை.. இன்று தவெக வேட்பாளர்! யாருப்பா அது?
R Sabarinathan TVK Candidate Virugambakkam: விஜய் தூக்கிய கொஞ்சிய குழந்தை இன்று தவெக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். யார் அவர்? என்பதை கீழே காணலாம்.

R Sabarinathan TVK Candidate Virugambakkam: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் போட்டியாக களமிறங்கியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம். தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய் தொடங்கியுள்ள இந்த கட்சி சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய் தூக்கிய கொஞ்சிய குழந்தை:
தவெக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது. விஜய் கட்சி சார்பில் போட்டியிடும் பலரும் நீண்ட காலமாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக பணியாற்றியவர்கள் ஆவார்கள். மாற்றுக்கட்சியினரும் தவெக-வில் போட்டியிடுகின்றனர். விஜய் தூக்கிக் கொஞ்சிய குழந்தை தற்போது விஜய்க்காக தவெக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அவர்தான் விருகம்பாக்கம் தவெக வேட்பாளர் விஜய் சபரிநாதன். இவர் விஜய்யின் நீண்டகால உதவியாளரான ராஜேந்திரனின் மகன் ஆவார். விஜய் தனக்கு வாய்ப்பு வழங்கியதை மிகவும் உருக்கமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
விஜய் ஒரு நம்பிக்கை:
நான் பிறந்ததிலிருந்து தலைவர் தளபதி விஜய் அவர்களுடன் 30 ஆண்டுகளாக பயணம் செய்து கொண்டிருக்கிறேன்,
இது ஒரு சாதாரண ரசிகன் பயணம் அல்ல,
இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்ட உணர்ச்சி…
அவரின் முதல் படத்திலிருந்து இன்று வரை,
ஒவ்வொரு வளர்ச்சியையும் என் கண்களால் பார்த்தேன்…
ஒவ்வொரு வெற்றியையும் என் மனதில் கொண்டாடினேன்…
ஒவ்வொரு விமர்சனத்திலும் அவருடன் வலித்தேன்…
அவர் சிரித்தால் நான் சிரித்தேன்…
அவர் போராடினால் நான் உறுதியானேன்…
அவர் வென்றால் அது என் வெற்றியாக உணர்ந்தேன்…
30 ஆண்டுகளாக அவர் எனக்கு நடிகர் மட்டும் இல்லை…
ஒரு ஊக்கம்…
ஒரு நம்பிக்கை…
ஒரு வாழ்க்கை பாடம்…
என் சிறு வயதில் தொடங்கிய இந்த பயணம்,
இன்று என் இதயத்தின் ஒரு அங்கமாகி விட்டது…
எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும்,
இந்த அன்பும், இந்த பற்றும் குறையாது…
ஏனெனில் இது ஒரு ரசிகன் உறவு அல்ல…
இது உயிரோடு கலந்த உணர்வு…
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நான் பிறந்ததிலிருந்து தலைவர் தளபதி விஜய் அவர்களுடன் 30 ஆண்டுகளாக பயணம் செய்து கொண்டிருக்கிறேன்,
— TVKVIJAYSABARINATHAN (@tvkvijaysabari) March 31, 2026
இது ஒரு சாதாரண ரசிகன் பயணம் அல்ல,
இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்ட உணர்ச்சி…
அவரின் முதல் படத்திலிருந்து இன்று வரை,
ஒவ்வொரு வளர்ச்சியையும் என் கண்களால் பார்த்தேன்…
ஒவ்வொரு… pic.twitter.com/w0ksxVCYmS
வெற்றி பெறப்போவது யார்?
மேலும், இந்த பதிவுடன் விஜய் இளைஞராக இருந்தபோது விஜய் சபரிநாதன் குழந்தையாக இருந்தபோது தூக்கிய கொஞ்சிய புகைப்படத்தையும், தற்போது விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தனது நீண்டகால உதவியாளரும், ஓட்டுனருமாக பணியாற்றியவரின் மகனுக்கு விஜய் போட்டியிட வாய்ப்பு வழங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
விருகம்பாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபுசபரிநாதனுக்கு போட்டியாக திமுக சார்பில் பிரபாகர்ராஜா, அதிமுக சார்பில் விருகை வி.என்.ரவி போட்டியிடுகின்றனர். இந்த தொகுதி சென்னையின் முக்கியமான தொகுதிகளில் ஒன்று என்பதால் வெற்றி பெறப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் சபரிநாதன் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















