West Bengal Exit Poll: மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
Exit Poll Results 2026: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில், கடந்த 23-ம் தேதி 152 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில், மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 93.17 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, 7 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 142 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் முந்துவது யார் என்பதை இப்போது பார்க்கலாம். மொத்தமுள்ள 294 இடங்களில், பெரும்பான்மையை பெற 148 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
Peoples Pulse நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
Peoples Pulse நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன.
- திரிணாமுல் காங்கிரங்ஸ் : 177 - 187 இடங்கள்
- பாஜக : 95 - 110 இடங்கள்
- காங்கிரஸ் : 1 - 3 இடங்கள்
- இடதுசாரி : 0 - 1 இடங்கள்
- மற்றவை : 1 - 3 இடங்கள்
Chanakya Strategies நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
Chanakya Strategies நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக முந்துகிறது.
- பாஜக : 150 - 160 இடங்கள்
- திரிணாமுல் காங்கிரஸ் : 130 - 140 இடங்கள்
- மற்றவை : 06 - 10 இடங்கள்
Matrize நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
Matrize நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருததுக் கணிப்பு முடிவுகளின் படி, மேற்கு வங்கத்தில் பாஜக முந்துகிறது.
- பாஜக : 146–161 இடங்கள்
- திரிணாமுல் காங்கிரஸ் : 125–140
- மற்றவை : 06–10
P-MARQ நடத்திய கருததுக்கணிப்பு முடிவுகள்
P-MARQ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருததுக்கணிப்பு முடிவுகளின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமையும்.
- பாஜக : 150–175 இடங்கள்
- திரிணாமுல் காங்கிரஸ் : 118 –138
- மற்றவை : 02–06
Poll Diary-க் கருத்துக்கணிப்பு முடிவுகள்
Poll Diary நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மேற்கு வங்கத்தில் பாஜகவே முந்துகிறது.
- பாஜக : 142–171 இடங்கள்
- திரிணாமுல் காங்கிரஸ் : 99 –127
- மற்றவை : 00–01
Praja Poll கருத்துக்கணிப்பின் முடிவுகள்
Praja Poll நடத்திய கருத்துக்கணிப்பிலும், மேற்கு வங்கத்தில் பாஜகவே முந்துகிறது.
- பாஜக : 178–208 இடங்கள்
- திரிணாமுல் காங்கிரஸ் : 85 –110
- மற்றவை : 00–05
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















