மேலும் அறிய

Villupuram Election Results 2024 : பலத்த பாதுகாப்பில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை  மையம்

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில் வாக்கு எண்ணும் மையம் போலீசாரின் பலத்த பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

Villupuram Lok Sabha Election Results 2024 : பலத்த பாதுகாப்பில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை  மையம்.

விழுப்புரம் villupuram பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில் வாக்கு எண்ணும் மையம் போலீசாரின் பலத்த பாதுகாப்பு வளையத்தில் உள்ளது, வாக்குசாவடி முகவர்கள் மற்றும் உழியர்கள் ஆகியோரை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர் . 8 மணிக்கு முதலவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும் . விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி Villupuram Lok Sabha Election 2024 உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 76.46 சதவிகித  வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்வாக்காளர்கள் 5,69,070 பெண் வாக்காளர்கள் 5,80,256 மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்தனர். இதில் 8424 தபால் வாக்குகள் பதிவாகின.  

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 ஸ்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கபட்டது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு villupuram lok sabha Election தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு  ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமையில் சீல் வைக்கப்பட்டது. விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவப்படை, தமிழக சிறப்பு காவல் படை, தமிழக காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு போடப்பட்டது. 

பாராளுமன்ற தேர்தல் 

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்த வரை விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1068 வாக்குச்சாவடி மையங்களில் 1966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. 

விழுப்புரம் தனி தொகுதியில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பெண் வாக்காளர்களும் மாற்றுபாலினத்தவர் 209 பேர் என மொத்தம் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர்  உள்ளனர். இதற்காக 4152 வாக்கு பதிவு கருவிகளும், 2076 கன்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2249 வி.வி.பேட் எனப்படும் உறுதிப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பிற்காக 2200 காவல் துறையினரும், 344 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், 6804 பேர் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

76.47 சதவிகித வாக்குகள் பதிவு 

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் 76.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 5,69,070, பெண் வாக்காளர்கள் 5,80,256, மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர். 2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட வாக்குகளை ஒப்பிடுகையில், 2019 விழுப்புரம் தொகுதி  அங்கு வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 14,43,436. பதிவான வாக்குகள் 11,28,998 பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 78.21%. 2024 ஆண்டு வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின்  எண்ணிக்கை 15,03,115. பதிவான வாக்குகள் 1104639. பதிவான வாக்குகள் சதவீதம் 73.49%. 2019 இன் படி 3,19,438 பேர் வாக்களிக்கவில்லை.

தலைப்பு செய்திகள்

Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget