மேலும் அறிய

காரைக்குடிக்கு விஜய் வருகை.. டிரான்ஸ்பார்மர், மரங்கள் மீது சுற்றி தகரங்கள் வைத்து அடைக்கும் பணி தீவிரம் !

டிரான்ஸ்பார்மர், மற்றும் மரங்கள் மீது இளைஞர்கள் ஏறாமல் இருப்பதற்காக மரங்களை சுற்றி தகரங்கள் வைத்து அடைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நாளை தேர்தல் பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு.

தமிழக வெற்றிக் கழகம்
 
தமிழக அரசியலில் புதிய முகமாகவும் மாற்றமாகவும் களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. சென்னை கொளத்தூர், திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய், கொளத்தூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன்பிறகு, திருச்சி கிழக்கில் பிரச்சாரம் செய்தார். பின்னர், சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டையில் பிரச்சாரத்திற்கு குறைவான நேரமே கொடுத்ததால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் புகார் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நாளை தேர்தல் பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை காரைக்குடி தேவர் சிலை அருகே பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தினர் அனுமதி கேட்ட இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் காரைக்குடி ஏ எஸ் பி ஆசிஸ் புண்ணியா மற்றும் அதிகாரிகள் Dr.பிரபுவிடம் பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
 
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம்
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக போட்டியிடும் Dr பிரபு மற்றும் சிவகங்கை மானாமதுரை திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக காரைக்குடி தேவர் சிலை அருகே பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதையொட்டி  தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
 
தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
 
பிரச்சாரத்தை காண வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இளைஞர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர், மற்றும் மரங்கள் மீது இளைஞர்கள் ஏறாமல் இருப்பதற்காக மரங்களை சுற்றி தகரங்கள் வைத்து அடைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஸ் வெங்கட்டிடம் காவல்துறை அறிக்கை அனுப்பியுள்ளனர். காலை 10 மணி அளவில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்கும் என தெரிய வருகிறது .

தலைப்பு செய்திகள்

Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget