மேலும் அறிய

வாக்குகளைப் பிரிக்க பாஜக இயக்கும் கூலிப்படைதான் விஜயும், சீமானும் - வன்னியரசு அதிரடிப் பேட்டி!

விஜயால் எந்த விதத்திலும் தமிழ்நாடு திமுக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த சேதரத்தையும் ஏற்படுத்த முடியாது - வன்னியரசு

விழுப்புரம் : விஜயால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த சேதரத்தையும் ஏற்படுத்த முடியாது. தேர்தலுக்குப் பிறகு தன்னை இயக்கியவர்கள் யார் என்பதை விஜய் புரிந்து கொள்வார். தேர்தலுக்குப் பிறகு விஜய் படம் நடிக்க சென்று விடுவார். அப்போது தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். திண்டிவனம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னியரசு பேட்டி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வன்னியரசு திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு. 

நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு அளவில் சாதகமான நிலை உள்ளது. அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைத்த பிறகு அதிமுக தொண்டர்களே உற்சாகம் இழந்துள்ளனர். திமுகவின் கூட்டணி கட்சிகள் உற்சாகமாக உள்ளனர். திராவிட மாடல் அரசின் கனவு நிறைவேறி வருகிறது. மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார். தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ், பாஜக, சங்க பரிவார அமைப்புகளின் முயற்சி தோற்கடிக்கப்பட்டு வருகிறது. 

சிவி.சண்முகம், மக்கள் மௌனம் புரட்சி செய்வார்கள் என கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு: 

சிவி.சண்முகம் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு டயலாக் விடுவார். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள். மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்கிறார்கள். சிவி.சண்முகத்தின் இந்த கருத்து திசை திருப்புவது மட்டுமல்ல, தோல்வி பயத்தில் கூறுகிறார். அதிமுக, பாஜகவோடு இணைந்தது குறித்து மௌனமாக உள்ளார் என்பதைத்தான், மௌனப் புரட்சி என சிவி.சண்முகம் கூறுகிறார். 

திண்டிவனம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐந்தாண்டுகளாக தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. தொகுதி அலுவலகமே பூட்டிதான் கிடக்கிறது. அர்ஜுனன் செயல்பாடே எனக்கு வெற்றி வாய்ப்பை எளிமையாக ஏற்படுத்திக் கொடுக்கும். அதிமுக தொண்டர்களும் எனக்கு ஆதரவு தருகிறார்கள். 

ஜனநாயகன் படம் இணைதளத்தில் வெளியாகி உள்ளது. விஜய் அடுத்தது புதிய படத்தில் நடிக்கலாம் அல்லது தயாரிப்பாளராகலாம். ஜனநாயகன் பட இழப்பு குறித்து இதுவரை இந்த பதிலும் கூறவில்லை. யாரோ தூண்டுதலின் பேரிலே அரசியலில் நிற்கிறார் விஜய். தேர்தலுக்குப் பிறகு தன்னை இயக்கியவர்கள், என்ன நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது விஜய்க்கு புரியும். சினிமா மோகத்தில் வரும் ரசிகர்களை வைத்து விஜய் மயக்கத்தில் உள்ளார். தேர்தலுக்குப் பிறகு இந்த மயக்கம் தெளிவடையும். மீண்டும் சினிமாவிற்கு செல்வார். மீண்டும் விஜய்க்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர வேண்டும். 

234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இனிமேல் எடப்பாடி என்பதை எடுத்துவிட்டு தோல்வி பழனிச்சாமி என வைத்துக்கொள்ள வேண்டும். 

சீமானும், விஜயும் அம்பலப்பட்டுள்ளனர். இவர்கள் முன்வைக்கும் அனைத்து செயல் திட்டங்களும் ஆர்.எஸ்.எஸ், பாஜக முன்வைக்கக்கூடிய செயல் திட்டங்கள். ஆர்.எஸ்.எஸ் பாஜகவால் இயக்கக்கூடிய கிளை அமைப்பாக நாம் தமிழர், விஜயும் உள்ளனர். 

வாக்குகளை பிரிக்க பாஜகவால் இயக்கக்கூடிய கூலி கும்பல் தான் நாம் தமிழர், விஜய். விஜயால் எந்த விதத்திலும் தமிழ்நாடு திமுக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த சேதரத்தையும் ஏற்படுத்த முடியாது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியை எப்போதும் சமூக நல்லிணக்கத்தை விரும்பும் கட்சி. திருமாவளவன் சமூக நல்லிணக்கத்தை தமிழ்நாடு முழுவதும் அரசியல் படுத்தி வருகிறார். அந்த வகையில் மரியாதைக்குரிய மருத்துவர் ராமதாஸ் மீது எப்போதும் நன்மதிப்பு வைத்துள்ளோம். அவர் உடல் நலம் தேறி நூறாண்டுகள் வாழ வேண்டும்.  திண்டிவனம் தொகுதியை நவீன தொகுதியாக மாற்றுவேன். உங்கள் வீட்டு வேலைக்காரனாக இந்த தொகுதியில் இருந்து பணி செய்ய வாய்ப்பு தர வேண்டும். என பேசினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Embed widget