மேலும் அறிய

TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

Tamil Nadu Assembly Election 2026: இளைஞர்களின் ஆதரவு காரணமாக முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக வலுவான மாற்றுத் தலைவராக விஜய் உருவெடுப்பார் என்று லோக்பால் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடிப்பிடித்துள்ள நிலையில் லோக் பால் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தவெக தலைவர் விஜய் மாற்றுத்தலைவராக உருவெடுப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்ப்பொருளாகியுள்ளது.

தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் அனல்பறக்க தொடங்கியுள்ளது, நான்கு முனை போட்டியாக நடைபெறும் இந்த தேர்தலில்  திமுக கூட்டணி 26 கட்சிகளுடன் களம் காண்கிறது, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் களம் காண்கிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி, மற்றும் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரின் விஜயின் தவெக கட்சியின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. 

கருத்துக்கணிப்பில் தனி கவனம் பெறும் தவெக: 

இந்த தேர்தலில் இளைஞர்களின் ஆதரவு தவெகவுக்கு அதிகம் உள்ளதால் எத்தனை இடங்கள் வெற்றிப்பெறுவார்கள் என்கிற கேள்வி எழுந்து வருகிறது, அந்த வகையில் லோக்போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கிய இந்த மெகா சர்வேயின் முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 181 முதல் 189 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 40.1 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்று வலுவான கூட்டணியாக திமுக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 38 முதல் 42 இடங்களை மட்டுமே பெறும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த தேர்தல்களைக் காட்டிலும் அதிமுகவின் வாக்கு வங்கி 29 சதவீதமாகக் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும் வகையில் முதல் தேர்தலிலேயே 23.9% வாக்கு சதவீதத்தை தவெக பெறும் எனவும், 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் மாற்று தலைவர்: 

இந்த கருத்துக்கணிப்பில் வெளிவந்துள்ள மற்றொரு தகவலின் படி இளைஞர்களின் ஆதரவு காரணமாக முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக வலுவான மாற்றுத் தலைவராக விஜய் உருவெடுப்பார் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இதில் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு (41%) அடுத்தபடியாக, விஜய் 27.1% ஆதரவுடன் ஒரு வலுவான மாற்றுத் தலைவராக உருவெடுத்துள்ளார்.

மேலும் தவெக இந்த தேர்தலில் சுமார் 23.9% முதல் 24.5% வரையிலான வாக்கு சதவீதத்தை ஈர்க்கிறது. குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் அரசு மீது அதிருப்தியில் இருப்பவர்களின் ஆதரவு இந்த கட்சிக்கு அதிகமாக உள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுவதால், இந்த வாக்கு ஆதரவு அப்படியே அதிகப்படியான தொகுதிகளாக மாற வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, தவெக சுமார் 8 முதல் 10 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget